மகளிர் வாழ்வில் மாபெரும் புரட்சி.. தமிழ்நாட்டை தலைநிமிர வைக்கும் பட்ஜெட் இது.. முதல்வர் பாராட்டு!
மகளிர் உரிமைத் தொகை திட்டம் மகளிர் வாழ்வில் புரட்சியை ஏற்படுத்தும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: மின்மினிப் பூச்சி போன்றது நிதிநிலை அறிக்கை என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மகளிர் வாழ்வில் மாபெரும் புரட்சியை மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஏற்படுத்தும் என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இருண்ட காலத்தை வழங்கிய எடப்பாடி பழனிசாமி உதயசூரியன் ஒளியை பார்க்க முடியாமல் தவிப்பதாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் அனைவரும் எதிர்பார்த்த வகையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆனால் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் அறிக்கை
அந்த அறிக்கையில், எல்லோருக்கும் எல்லாம் என்ற திசை நோக்கி தமிழக அரசின் பயணம் தொடரும், வெல்லும். தமிழக பட்ஜெட் திராவிட மாடல் கருத்தியலை முழுமையாக உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை உரிய காலத்தில் முடித்து மக்களுக்கு வழங்க அமைச்சர்கள், அதிகாரிகள் அயராது பாடுபட வேண்டும்.

தலைநிமிர வைக்கும் பட்ஜெட்
அனைத்து மக்களுக்கும் உதவி செய்யப்போகும் பல்வேறு நலத்திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. மக்கள் வாழ்வில் மாபெரும் புரட்சியை மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஏற்படுத்தும். திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சி, வேளாண் உற்பத்தி பெருகியுள்ளது. தமிழ்நாட்டை தலை நிமிர வைக்கும் நிதிநிலை அறிக்கை இது என்ரு பாராட்டு தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம்
தொடர்ந்து, மின்மினிப் பூச்சி போன்றது நிதிநிலை அறிக்கை என்று கூறிய எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டின் உள்ளடக்கங்களை அறியும் பக்குவம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. அதிமுக ஆட்சியில் இருந்த இருண்ட கால நிதிநிலையை சீர்செய்து முன்னேற்றி முற்போக்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உதயசூரியன் ஒளி
இருண்ட காலத்தை தமிழ்நாட்டுக்கு வழங்கிய பழனிசாமியால் உதயசூரியன் ஒளியை பார்க்க முடியாமல் தவிர்ப்பதையே அவரது பேட்டி உணர்த்துகிறது. நிதிநிலை மட்டும் சீராக இருந்திருக்குமானால் இன்னும் பல திட்டங்களை தீட்டியிருக்க முடியும். தமிழ்நாட்டை நோக்கி ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications