எதிர் வீட்டில் திடீர் விசிட் கொடுத்த முதல்வர்...திகைத்துபோன மூதாட்டி...நெகிழ்ச்சியில் குடும்பத்தார்

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழக முதல்வர் ஸ்டாலின் , தனது கொளத்தூர் தொகுதி அலுவலகத்திற்கு எதிரே உள்ள மூதாட்டியின் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதை கேள்விப்பட்டு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

முதல்வர் ஸ்டாலின் கடந்த 2011 முதலே கொளத்தூர் தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளார். 2016ல் மீண்டும் வெற்றி பெற்ற ஸ்டாலின், தற்போது 2021ல் கொளத்தூரில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற நிலையில், முதல்முறையாக தமிழகத்தின் முதல்வராக உள்ளார்.

எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போதும் கொளத்தூர் சட்டசபை தொகுதியில் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வந்தார் மு.க.ஸ்டாலின். தற்போது ஆட்சி பொறுப்பேற்று முதல்வராக உள்ள நிலையிலும் தன்னை வெற்றி பெற செய்த கொளத்தூர் தொகுதியை அடிக்கடி விசிட் செய்வதை ஸ்டாலின் வழக்கமாக வைத்துள்ளார்.

பல்வேறு உதவிகள்

பல்வேறு உதவிகள்

கொளத்தூர் தொகுதிக்கு அடிக்கடி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளிய மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்குதல், பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்குவதல் உள்பட பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். மேலும் அந்த தொகுதியில் பொதுமக்களிடம் உள்ள குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகிறார்

குடும்பத்தினர் சந்திப்பு

குடும்பத்தினர் சந்திப்பு

எதிர்க்கட்சி தலைவராக கடந்த 5 ஆண்டுகளில் எண்ணற்ற முறை தொகுதிக்குச் சென்று, தொகுதி மேம்பாட்டு நிதியில் பல்வேறு பணிகளைச் செய்திருக்கும் ஸ்டாலின், தனது தொகுதிஅலுவலகம் எதிரே வசிக்கும் சிண்டிகேட் வங்கியின் ஓய்வு பெற்ற ஊழியர் சிவராமகிருஷ்ணன் குடும்பத்தினருடன் நல்ல நட்பு பாராட்டி வருகிறார். ஸ்டாலின் வரும்போது இந்த குடும்பத்தினர் வரவேற்பார்கள். அப்போது ஏற்பட்ட பழக்கம், நல்ல நட்பாக மாறியது. முதல்முறையாக முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின் அதன் பின்னர் கொளத்தூர் சென்ற போது, அந்த குடும்பத்தினரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அம்மாவின் உடல் நலம்

அம்மாவின் உடல் நலம்

இந்நிலையில் தனது அலுவலகம் எதிரே உள்ள சிண்டிகேட் வங்கியின் ஓய்வு பெற்ற ஊழியர் சிவராமகிருஷ்ணனின் மனைவியின் அம்மா உடல் நலக்குறைவால் பாதித்கப்பட்டுள்ளார் என்ற தகவல் அறிந்து இன்று மாலை அவர்களது இல்லத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்றார். அங்கு மரியாதை நிமித்தமாக சென்ற அவர் சிவராமகிருஷ்ணனின் மனைவியின் அம்மாவின் உடல் நலத்தை விசாரித்தார்.

நெகிழ்ந்து போன மூதாட்டி

நெகிழ்ந்து போன மூதாட்டி

வயதான தாயாரின் உடல் நிலை சரியில்லை என்று கேள்விப்பட்ட உடனே முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்குள் வந்ததை அந்த குடும்பத்தினர் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். புன்னகையுடன் ஸ்டாலினை வீட்டிற்குள் வரவேற்று அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் அன்பாக நலம் விசாரித்த ஸ்டாலின், சிறிது நேரம் அங்கிருந்தார். அதன்பிறகே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+