ஆசிரியர் தின விழா.. ஆச்சர்யப்பட வைத்த முதல்வர் ஸ்டாலின்.. இரண்டாவது தரமான சம்பவம்!
சென்னை : தமிழ்நாட்டில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பெயரில் வழங்கப்படும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதில் 2007 ஆண்டு முதல் முதலமைச்சர் படத்துடன் வழங்கப்பட்டு வந்தது. சிறந்த ஆசிரியருக்கான ராதாகிருஷ்ணன் விருது சான்றிதழில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் இல்லை. உண்மையில் இது மிகவும் பாராட்டத்தக்க விஷயம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சிறப்புற பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தன்று நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2020-21ஆம் கல்வியாண்டில் அனைத்து வகையான பள்ளிகளிலும் சிறப்பாக பணிபுரிந்த 379 ஆசிரியர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தைச் சார்ந்த 10 ஆசிரியர்கள் என மொத்தம் 389 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

ஸ்டாலின் வழங்கினார்
இவ்விருது வழங்குவதன் அடையாளமாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதிற்கான வெள்ளிப்பதக்கம், 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

2007 முதல் இருக்கிறது
இந்த விழாவில் மிகப்பெரிய ஹைலைட் முதலமைச்சர் ஸ்டாலின் படம் இல்லாதது தான். வழக்கமாக தமிழ்நாட்டில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பெயரில் வழங்கப்படும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதில் 2007 ஆண்டு முதல் முதலமைச்சர் படத்துடன் வழங்கப்பட்டு வந்தது.

விருதில் படம் இல்லை
ஆனால் ஸ்டாலின் முதல்முறையாக முதல்வராக பதவியேற்ற பின்னர் வழங்கப்படும் ஆசிரியர் தின விழாவில், சிறந்த ஆசிரியருக்கான ராதாகிருஷ்ணன் விருது சான்றிதழில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் இல்லை. உண்மையில் இது மிகவும் பாராட்டத்தக்க விஷயம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் புத்தக பை
அண்மையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இருந்தது. இந்த படங்களை மறைக்க 13 கோடி செலவாகும் என்ற நிலை இருந்தது. ஆனால் வழக்கமாக ஒரு கட்சி ஆட்சியை இழந்த பிறகு ஆட்சிக்கு வரும் கட்சி, அவர்களின் அடையாளங்கள் இருந்தால் அவற்றை மறைக்க பார்க்கும்,
Recommended Video

வேண்டாம் என் படம்
ஆனால் முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி படமே மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தக பையில் இருக்கட்டும். அதை மறைக்க வேண்டாம் என்று கூறிவிட்டார். இதன் மூலம் 13 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை மாணவர்களின் நலனுக்காக பயன்படுத்தலாம் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு ஸ்டாலின் அறிவுரையும் வழங்கினார்.

புதிய அரசியல்
ஸ்டாலினின் இந்த புதிய அரசியல், தமிழகம் தாண்டி, தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா என நாட்டின் பல மாநில தலைவர்களால் பாராட்டை பெற்றுள்ளது. அங்குள்ள எதிர்கக்ட்சிகள் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றன. இந்நிலையில் இரண்டாவது நிகழ்வாக ராதாகிருஷ்ணன் விருது சான்றிதழில் விருதில் முதலமைச்சர் படம் இல்லை. இதுவும் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications