”நீண்ட கால நண்பர்” மு.க.ஸ்டாலினின் வாழ்க்கையும், அரசியலும் ஒன்றுதான்.. ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!

மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் ஒன்றுதான் என ரஜினி கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை பயணம் மற்றும் அரசியல் பயணம் இரண்டும் ஒன்றுதான் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். படிப்படியாக உழைத்து முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உயர்ந்துள்ளதாக கூறிய ரஜினிகாந்த், அமைச்சர் சேகர்பாபுவுக்கு பாட்ஷாவை போல் இன்னொரு முகமும் இருக்கிறது என்று தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால வாழ்க்கைப் பயணத்தை வெளிப்படுத்தும் வகையில் சென்னையில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. எங்கள் முதல்வா் எங்கள் பெருமை என்ற பெயரில் சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்தக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு வழிகாட்டுதலில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கடந்த பிப். 28ல் திறந்து வைத்தாா். இந்தக் கண்காட்சி மாா்ச் 12ம் தேதியுடன் (நாளை) நிறைவு பெறுகிறது.

54 ஆண்டு அரசியல் பயணம்

54 ஆண்டு அரசியல் பயணம்

நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு உருவாக்கப்பட்டிருக்கிறது இந்தக் கண்காட்சி அரங்கில் மு.க.ஸ்டாலினின் அரசியல் பயணம் தொடக்கம் முதல் தற்போது வரையிலான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. திமுக தொண்டா், பொதுக்குழு உறுப்பினா், இளைஞரணிச் செயலாளர், சட்டப்பேரவை உறுப்பினர், சென்னை மேயா், திமுக பொருளாளா், திமுக தலைவா், முதலமைச்சர் என ஒரே ஃபிரேமில் அமைக்கப்பட்ட எட்டு புகைப்படங்கள் பலரையும் ஈர்த்துள்ளது.

 புகைப்பட கண்காட்சியில் ரஜினிகாந்த்

புகைப்பட கண்காட்சியில் ரஜினிகாந்த்

இந்தப் புகைப்பட கண்காட்சியை பார்வையிட திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோருக்கு அமைச்சர் சேகர்பாபு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி ஏற்கனவே ஏராளமான நடிகர்கள், நடிகைகள் பார்வையிட்டனர். அந்த வகையில் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் புகைப்பட கண்காட்சியை பார்வையிட நடிகர் ரஜினிகாந்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 மு.க.ஸ்டாலின் பற்றி ரஜினிகாந்த்

மு.க.ஸ்டாலின் பற்றி ரஜினிகாந்த்


அதன்படி நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை இன்று பார்வையிட்டார். இந்தப் புகைப்பட கண்காட்சியில் மு.க.ஸ்டாலின் - ரஜினிகாந்த் இணைந்த புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. அதனையும் நடிகர் ரஜினிகாந்த் பார்த்து ரசித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ரஜினிகாந்த் கூறுகையில், மிகவும் அருமையான ஒரு புகைப்பட கண்காட்சி. என்னை ரொம்ப நாளாக அழைத்து கொண்டே இருந்தார்கள். நான் படப்பிடிப்பில் இருந்ததால் வர முடியவில்லை.

 சேகர்பாபு பாட்ஷா மாதிரி

சேகர்பாபு பாட்ஷா மாதிரி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை பயணம், அரசியல் பயணம் இரண்டு ஒன்றுதான். 54 ஆண்டுகள் அரசியல் பயணம் உள்ளது. கட்சியில் உழைத்து படிப்படியாக பல பதவிகளை வகித்து இன்று முதலமைச்சராக இருக்கிறார். அது மக்கள் மு.க.ஸ்டாலினின் உழைப்புக்கு கொடுத்த அங்கீகாரம் என்று தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது அமைச்சர் சேகர்பாபு உடனிருந்தார். பின்னர் சேகர்பாபு பற்றி பேசிய ரஜினிகாந்த், அமைச்சர் சேகர்பாபு மிகவும் அன்பானவர். விஸ்வாசமானவர். அவருக்கு பாட்ஷா மாதிரி இன்னொரு முகமும் இருக்கிறது என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+