மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட மு.க.தமிழரசு.. சகோதரரை சந்தித்து நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்!
சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சகோதரர் மு.க.தமிழரசை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை மு.க.தமிழரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை சென்ற மு.க.ஸ்டாலின், மருத்துவர்களிடம் தனது சகோதரருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்திருக்கிறார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சகோதரர் மு.க.தமிழரசு. திமுகவில் பொறுப்பில் இல்லையென்றாலும், தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலினுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டவர். அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலின் போதும் தயாநிதி மாறனுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இவரின் மகன் தான் நடிகர் அருள்நிதி. சென்னையில் வசித்து வரும் மு.க.தமிழரசுக்கு இன்று காலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாக அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டார். இதன்பின் அவரை உறவினர்களும், குடும்பத்தினரும் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்த நிலையில் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சகோதரர் மு.க.தமிழரசை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். எம்ஜிஎம் மருத்துவமனைக்கு நேரில் சென்று தனது சகோதரரை சந்தித்த மு.க.ஸ்டாலின், பின்னர் மருத்துவர்களிடம் அவருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார். மேலும், மு.க.தமிழரசுக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்சனை குறித்து எந்த தகவலும் மருத்துவமனை நிர்வாகத்தால் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications