நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95வது பிறந்தநாள்.. புகைப்படத்திற்கு மலர்தூவி ஸ்டாலின் மரியாதை
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது புகைப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவரது புகைப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

நடிகர் சிவாஜி கணேசனின் வெண்கல சிலை சென்னை ஆர்.ஏ.புரம் மணிமண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ளது. சிவாஜி சிலையை மக்கள் பார்வைக்கு படும்படி வெளியே அமைக்குமாறு கோரிக்கை வைத்த நிலையில், வெளியே அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிலைக்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணிமண்டபத்தை பார்வையிட்டு சிவாஜி கணேசனின் குடும்பத்தினரிடம் சிறிது நேரம் பேசினார். இதனிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்த வந்தார். அப்போது கே.எஸ். அழகிரி - மு.க.ஸ்டாலின் சந்தித்தனர்.
இதையடுத்து கவிஞர் வைரமுத்து, நடிகர் பிரபு, நடிகர் ராஜேஷ், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சிவாஜி கணேசனின் ரசிகர்களும், பல்வேறு அமைப்புகளும் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications