ஊர் என்பதா? உயிர் என்பதா? பன்முகத்தன்மையின் சமத்துவச் சங்கமம் “சென்னை”: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊர் என்பதா - உயிர் என்பதா சென்னையை? சென்னை - ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையைப் பற்றி பெருமிதமாகத் தெரிவித்துள்ளார்.

16ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில், தொண்டை மண்டலக் கடற்கரையின் மீனவக் கிராமங்களில் ஒன்றாக இருந்த 'சென்னப்பட்டணம்' இப்போது உலகப் பெருநகரமாக மாறியுள்ளது. 1639ஆம் ஆண்டு இதே நாளில் தான் இன்றைய சென்னையாக இருக்கும் நிலத்தை கையகப்படுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. இதனால், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நகரில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Chief minister MK Stalin proud about chennai on Madras day

384வது சென்னை தினத்தையொட்டி தமிழக அரசு சார்பிலும், சென்னை மாநகராட்சி சார்பிலும் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகையில் 'அக்கம் பக்கம்' என்ற பெயரில் சென்னை தின புகைப்படக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து பார்வையிட்டார்.

இந்த கண்காட்சியில் சென்னையின் பாரம்பரியத்தை விவரிக்கும் வகையில் சென்னை பள்ளி மாணவர்கள் எடுத்த சென்னையின் புகழ்பெற்ற இடங்கள், நிகழ்வுகள் புகைப்படங்களும், கருப்பு வெள்ளை புகைப்படங்களும், இந்து குழுமம் சார்பில் சென்னையின் வரலாற்று ஆவண புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

சென்னை தினத்தையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பேரறிஞர் அண்ணா தமிழ் நிலத்துக்கு, தமிழ்நாடெனப் பெயர் சூட்டினார். தமிழினத் தலைவர் கலைஞர் தமிழ்நாட்டின் தலைநகருக்குச் சென்னை எனப் பெயர் மாற்றினார்!

Chief minister MK Stalin proud about chennai on Madras day

கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியலோடு பிணைந்துவிட்ட சொல் என்பதா - ஊர் என்பதா - உயிர் என்பதா சென்னையை? சென்னை - ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி. பன்முகத்தன்மையின் சமத்துவச் சங்கமம்! வாழிய வள்ளலார் சொன்ன 'தருமமிகு சென்னை'!" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+