கருணாநிதி முத்தமிடும் படம்.. மகிழ்ச்சியில் திளைத்தபடி ஸ்டாலின்.. தந்தையர் தினத்தில் உருகிய முதல்வர்!
சென்னை : தந்தையர் தினத்தில் எந்தையை நினைத்து வணங்குகிறேன், எல்லார் தந்தையரையும் வாழ்த்துகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, தந்தையரின் பெருமைகளை பிள்ளைகள் பகிர்ந்து, இந்நாளைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், தனது தந்தையான முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு "தன்னை உருக்கி மக்களை அவையத்து முந்தியிருக்கச் செய்து, அறிவை, ஆற்றலை, அன்பை, பண்பை வளத்தைத் தந்ததால் அவர் தந்தையர்" எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

தந்தையர் தினம்
நம்மை வளர்த்து ஆளாக்கிய தந்தையரின் தியாகங்களை போற்றுவதற்குரிய நாளாக இருக்கிறது தந்தையர் தினம். ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தந்தையர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

கொண்டாடும் பிள்ளைகள்
வாழும் நாளெல்லாம் குடும்பத்திற்கு உழைத்து, கனிவையும், கண்டிப்பையும் காட்டி, குழந்தைகளின் வளர்ச்சிக்காக தன்னையே அர்ப்பணித்து வாழும் தந்தையர்களின் பெருமையைக் கொண்டாடும் நாளான இன்று உலகம் முழுவதுமுள்ள பெற்ற பிள்ளைகள், தங்கள் தந்தையரைக் கொண்டாடியும், அவர்களுடனான நினைவுகளைப் பகிர்ந்தும் வருகின்றனர்.

ஆசைகளுக்கு உயிர்கொடுக்கும் அப்பாக்கள்
அப்பாக்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு, அன்பு, தியாகம் உள்ளிட்டவைகளை பாராட்டி அவர்களைக்ப் பெருமைப்படுத்தவே தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. பிள்ளைகளின் நலனை நெஞ்சில் சுமந்து, அவர்களின் ஆயிரமாயிரம் ஆசைகளுக்கும், கனவுகளுக்கும் உயிர் கொடுக்க ஓடிக் கொண்டிருக்கும் அப்பாக்களுக்கான தினத்தில் அவர்களைப் பெருமைப்படுத்தி வருகின்றனர் பிள்ளைகள்.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
அந்தவகையில், தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் தந்தையர் தினத்தையொட்டி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அப்பாக்களின் தினம் இன்று! உழைத்து, தன்னை உருக்கி மக்களை அவையத்து முந்தியிருக்கச் செய்து, அறிவை, ஆற்றலை, அன்பை, பண்பை வளத்தைத் தந்ததால் அவர் தந்தையர்! தந்தையர் தினத்தில் எந்தையை நினைத்து வணங்குகிறேன்! எல்லார் தந்தையரையும் வாழ்த்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications