சேப்பாக்கத்தில் புதிய கேலரிக்கள் திறந்து வைப்பு! ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின், தோனி, உதயநிதி!

சேப்பாக்கம் மைதானத்தில் அதிநவீன வசதிகளுடன் கலக்கலாகக் கட்டப்பட்டுள்ள புதிய கேலரிக்கள் இன்று திறந்து வைக்கப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் அதிநவீன வசதிகளுடன் கலக்கலாகக் கட்டப்பட்டுள்ள இந்த புதிய கேலரிக்கள் இன்று திறந்து வைக்கப்பட்டது. இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் இந்த புதிய கேலரிக்களை திறந்து வைத்தார்.

இந்தியாவில் மிகவும் பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாகச் சென்னை சேப்பாக்கம் உள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டனுக்கு பிறகு நாட்டின் 2ஆவது பழமையான கிரிக்கெட் மைதானமாக இது உள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் சர்வதேச போட்டிகள், ஐபிஎல், ரஞ்சி கோப்பை என்று பல்வேறு கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை சேப்பாக்கம்

சென்னை சேப்பாக்கம்

கடந்த 2011ஆம் ஆண்டு இந்தியாவில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்ற போது சேப்பாக்கம் மைதானத்தின் ஒரு பகுதி புதுப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் மெல்ல ஒவ்வொரு பகுதியாகப் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அங்குள்ள அண்ணா பெவிலியன் பகுதி இடிக்கப்பட்டு, நவீன வசதிகளுடன் புதிதாக கேலரிக்கள் கட்டப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கும் அறை, அலுவலகங்கள், புதிய கேலரிக்கள் கட்டப்பட்டன.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

சேப்பாக்கம் மைதானத்தில் அதிநவீன வசதிகளுடன் கலக்கலாகக் கட்டப்பட்டுள்ள இந்த புதிய கேலரிக்கள் இன்று திறந்து வைக்கப்பட்டது. இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் இந்த புதிய கேலரிக்களை திறந்து வைத்தார். இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், முதல்வருடன் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன், சிஎஸ்கே கேப்டன் தோனி பங்கேற்றனர்.

கருணாநிதி பெயர்

கருணாநிதி பெயர்

இதன் மூலம் ஒரே மேடையில் முதல்வர், உதயநிதி, தோனி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், சேப்பாக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கேலரி பகுதிக்கு முன்னாள் முதல்வரான கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது. கலைஞர் கருணாநிதி ஸ்டாண்ட் என்று இந்த கேலரிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், இது திறந்த பின்னர் போட்டியைக் காணும் அனுபவம் மேம்படும் என்று கூறப்பட்டுள்ளது

கிரிக்கெட்

கிரிக்கெட்

கிரிக்கெட் இந்த புதிய கேலரிக்கள் திறக்கப்பட்ட உடன், வரும் 22ஆம் தேதி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி இதே சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. அந்த போட்டியில் புதிய ஸ்டாண்டுகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் இம்மாத இறுதியில் தொடங்கும் நிலையில், சேப்பாக்கத்தில் புதிய கேலரிக்கள் திறக்கப்பட உள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+