முதல்வரின் அடுத்த பயணம்.. பிப்.21, 22ல் திருச்சி, திருவாரூர் செல்லும் ஸ்டாலின்.. முக்கிய அறிவிப்பு!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப். 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு மாவட்டங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
அண்மைக் காலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "கள ஆய்வில் முதல்வர்" என்ற புதிய திட்டத்தின் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொண்டு அரசு திட்டங்களையும் பார்வையிட்டு வருகிறார். அதேபோல் அதிகாரிகளுடன் ஆலோசனை மற்றும் ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ்நாட்டில் முதன் முறையாக வேலூரில் கள ஆய்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்ட ஆய்வு பணியை தொடங்கினார். இதில் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். அப்போது போலீஸ் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
அதன் பின்னர் சென்னை திரும்பியதும், மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து சேலம் மண்டலத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த பயணத்தின் போது கட்சி சார்ந்த நிர்வாகிகளையோ, நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் வரும் பிப்.21, 22 ஆகிய தேதிகளில் திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டம் பயணித்த போது, சுமார் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதனால் இந்த சுற்றுப்பயணத்தின் போது பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி?












Click it and Unblock the Notifications