"எங்கள் வழிகாட்டி" தகைசால் தமிழர் விருதின் பெருமை.. நல்லகண்ணுவுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 98வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி தியாகராய நகரில் உள்ள நல்லகண்ணுவை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்லகண்ணு குறித்து மு.க.ஸ்டாலின் கூறுகையில், பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர எடுத்துள்ள முயற்சிக்கு வழிகாட்டியாக நல்லகண்ணு விளங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினரும், முத்த தலைவருமான நல்லகண்ணு 98வது வயதை எட்டியுள்ளார். 25 ஆண்டுகள் விவசாய தொழிலாளர் சங்கத் தலைவராகவும், 13 ஆண்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகவும் சிறப்பாக கடமையாற்றிய நல்லகண்ணு, பல்வேறு அடக்குமுறைகளை, சிறை தண்டனைகளை எதிர்கொண்டவர்.

நல்லகண்ணுவின் 80வது ஆண்டு பிறந்தநாள் விழாவின்போது, அவருக்காக கட்சி திரட்டிக் கொடுத்த ஒரு கோடி ரூபாய் நன்கொடையை கட்சிக்கே திருப்பி அளித்தார். தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனத் தலைவர் அருணாச்சலம் கொடுத்த காரையும் கட்சிக்கே வழங்கினார். தமிழக அரசு அளித்த அம்பேத்கர் விருதுடன் கொடுத்த ஒரு லட்சம் ரூபாயையும் கட்சிக்கும், விவசாய தொழிலாளர் சங்கத்திற்கும் அன்பளிப்பாக வழங்கினார்.

முதல்வர் நேரில் வாழ்த்து

முதல்வர் நேரில் வாழ்த்து

அதுமட்டுமல்லாமல் அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தகைசால் தமிழர் விருது அளித்து ரூ.15 லட்சம் நன்கொடை வழங்கியபோது, அந்தத் தொகையுடன் தனது பங்காக 5 ஆயிரத்தையும் சேர்த்து முதல்வரின் நிவாரண நிதிக்கே நல்லகண்ணு வழங்கினார். இந்த நிலையில் நல்லகண்ணுவின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முக ஸ்டாலின் பேச்சு

முக ஸ்டாலின் பேச்சு

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு 98வது ஆண்டு பிறந்தநாள். அவரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்தும் நேரத்தில், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தகைசால் தமிழர் விருதினை சங்கரய்யாவுக்கும், நல்லகண்ணுவுக்கும் அடுத்தடுத்த ஆண்டுகளில் வழங்கி இருக்கிறோம்.

 விருதுக்கு பெருமை

விருதுக்கு பெருமை

என்னை பொறுத்தவரை தகைசால் தமிழர் விருது மூத்த தலைவர்களான நல்லகண்ணுவுக்கு வழங்கியதால் மட்டுமே அந்த விருதுக்கு பெருமை கிடைத்துள்ளது. அந்த உணர்வோடு அரசின் சார்பில் வழங்கி இருந்தாலும், இன்று திமுக சார்பில் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தி வணங்க கடமைப்பட்டிருக்கிறேன்.

பாஜக ஆட்சிக்கு முடிவு

பாஜக ஆட்சிக்கு முடிவு

98 வயதிலும் என்றைக்கும் கொள்கையில் இருந்து நழுவிவிடாமல், கொள்கைக்கு இலக்கணமாக லட்சியத்திற்கு இலக்கணமாக அவர் ஆற்றி கொண்டிருக்கும் பணியை தொடர வேண்டும். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு நாம் எடுத்திருக்கும் முயற்சிக்கும் வழிகாட்டியாக நல்லகண்ணு விளங்கி கொண்டிருக்கிறார். அதேபோல் திமுக அரசுக்கும் வழிகாட்டி கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+