புதிய கருப்பு வண்ணத்தில் முதல்வர் ஸ்டாலினின் பாதுகாப்பு வாகனங்கள்.. புத்தாண்டில் புதிய மாற்றம்
சென்னை: 2024ம் ஆண்டு புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், இன்று முதல் புதிய கருப்பு வண்ணத்தில் முதல்வர் ஸ்டாலினின் பாதுகாப்பு வாகனங்கள் மாறி உள்ளது. 6 புதிய கருப்பு இன்னோவா கார்களை அரசு வாங்கி உள்ளது.
தமிழக முதல்வர் எங்கு சென்றாலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும், கமாண்டோ பாதுகாப்பும் வழங்கப்படும். முதல்வர் ஸ்டாலின் விரைவாகவும், பாதுகாப்பாகவும் செல்வதற்காக அவரது வாகனத்தின் முன்பும் பின்பும் கான்வாய் எனப்படும் பாதுகாப்பு வாகனங்கள் செல்வது வழக்கமாக உள்ளது.

முதல்வருடன் குண்டு துளைக்காத ஜாமர் கார், இணைய வழியிலான ஆபத்துகள் இருந்தால் துண்டிக்கத் தொழில்நுட்ப வசதி கொண்ட ஒரு கார், அட்வான்ஸ் பைலட், அட்வான்ஸ் டிசி உள்ளிட்ட கார்கள் இடம் பெறும். அதேபோல் டி.எஸ்.பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி முதல்வரின் காருக்கு முன்னதாக சென்று அங்கு சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா எனக் கண்காணிப்பார்.
பாதுகாப்பு வாகனங்கள் சூழவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து நாள்தோறும் தலைமைச் செயலகத்திற்கு சென்று வருகிறார். முதல்வர் ஸ்டாலின் செல்லும் சமயத்தில் அப்பகுதியில் போக்குவரத்து சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டு, சென்ற பிறகு மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும்.
முதல்வர் ஸ்டாலின் பாதுகாப்பு வாகனங்களின் நிறம் மாறி உள்ளது. 2024ம் ஆண்டு புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், இன்று முதல் புதிய கருப்பு வண்ணத்தில் முதல்வர் ஸ்டாலினின் பாதுகாப்பு வாகனங்கள் மாறி இருக்கிறது.
கடந்த 2021ம் ஆண்டுக்கு முன்பு வரை முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 12-ல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2021ல் 6-ஆக குறைக்கப்பட்டது. மேலும் முதல்வரின் வாகனம் வரும்போது போக்குவரத்தை நிறுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படியே தற்போது நடைமுறை இருக்கிறது.
இதனிடையே இன்று முதல் கருப்பு நிறத்திற்கு பாதுகாப்பு கார்கள் மாறியத்திற்கான காரணங்கள் தெரியவில்லை. அதேநேரம் கருப்பு நிறம் பாதுகாப்பானது என்பதால் மாறியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் கேரளாவில் முதல்வரின் கார், பாதுகாப்பு கார்கள் கருப்பு நிறுத்தில் தான் உள்ளன. கருப்பு நிறம் பாதுகாப்பானது என்று பரிந்துரைக்கப்பட்டதால் கேரளாவில் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications