சென்னை தேனாம்பேட்டை அம்மா உணவகத்தில் முதல்வர் அடுத்தடுத்து கேட்ட கேள்வி.. அதிர்ந்த அதிகாரிகள்
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்திற்கு முதல்வர் முக ஸ்டாலின் இன்று திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு சமையலைற்குள் விறுவிறுவென சென்ற முதல்வர் ஸ்டாலின், ரெடியாகி கொண்டிருந்த உணவை சாப்பிட்டு பார்த்தார். பின்னர் அம்மா உணவக ஊழியர்களிடம், உணவு தயாரிக்கும் முறைகளை கேட்டறிந்தார். என்ன நடந்தது என்பதை பற்றி பார்ப்போம்.
ஏழை-எளிய மக்கள் பசியால் வாடிவிடக் கூடாது என்பதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2013-ம் ஆண்டு அம்மா உணவகத்தை ஆரம்பித்தார். இங்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் மிகக் குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னையில் முதன் முதலில் தொடங்கப்பட்ட அம்மா உணவகம் திட்டத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. சென்னையில் மட்டும் வார்டுக்கு இரண்டு என மொத்தம் 407 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டிருந்தது. பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த அம்மா உணவகங்கள் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான இடங்களில் இயங்கி வருகின்றன. சென்னையை பொறுத்தவரை பல்வேறு காரணங்களுக்காக ஐந்து உணவகங்கள் மூடப்பட்டன. தற்போது, 402 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
சென்னையில் அம்மா உணவங்கள் எல்லாமே மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகள், முக்கிய பேருந்து நிலையங்கள், தினசரி வாக்கிங் செல்லும் குளத்தை ஒட்டிய இடங்கள், பூங்காக்கள், நெடுஞ்சாலையோரங்கள், மக்கள் அதிக செல்லும் சாலைகள் போன்ற பல்வேறு இடங்களில் அம்மா உணவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அம்மா உணவகங்கள் அதிமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், இப்போது திமுக ஆட்சியிலும் தொடர்கிறது.சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் மூலம் தினசரி 2 லட்சம் இட்லி, 10 ஆயிரம் அளவில் சாதங்கள், 70 ஆயிரம் சப்பாத்திகள் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தினசரி 5 லட்சம் ரூபாய் என, ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆனால், அதற்கான செலவு ஆண்டுக்கு 140 கோடி ரூபாய் ஆகிறது என்றும் இதனால், 120 கோடி ரூபாய் ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சிக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் கூறப்பட்டது. அரசிடம் இதற்காக சென்னை மாநகராட்சி 100 கோடி தர வேண்டும் என்று சில வருடம் முன்பு கடிதம் எழுதியது. எனினும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே போல் அம்மா உணவகங்களில் சரியாக உணவுகள் விநியோகம் இல்லை என்றும், அம்மா உணவகங்கள் நலிவடைந்து விட்டதாகவும் புகார்கள் எழுந்தன. சென்னையில் அம்மா உணவகங்கள் பல இடங்களில் பராமரிப்பு இன்றி உள்ளதாகவும் புகார்கள் எழுந்தது. இந்நிலையில் தான் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பொலிவு செய்ய சென்னை மாநகராட்சி ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கியது. அம்மா உணவகங்களின் கட்டமைப்பை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்தும் பணி விரைவில் தொடங்க போகிறது.

இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்றார். அங்கு விறுவிறுவென உள்ளே சென்ற முதல்வர் நேராக சமையலைக்குள் சென்றார். அங்கு சமைத்து கொண்டிருந்தவர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அவர்களிடம் சாப்பாடு செய்யும் முறைகள் குறித்து விசாரித்த முதல்வர் ஸ்டாலின், அப்படியே சாப்பாடு ஒவ்வொன்றையும் சாப்பிட்டு ருசி பார்த்தார்.
அங்கிருந்த தண்ணீர் வைக்கும் இடம், உணவகத்தின் சுத்தம் ஆகியவற்றையும் பார்த்தார். மேலும் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சமையலுக்கு பயன்படுத்தும் பாத்திரங்கள் ஆகியவை முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதையும் பார்த்தார். அவர் அம்மா உணவகத்திற்குள் போகும் போதே , மாநகராட்சி அதிகாரிகளையும் அழைத்து சென்றிருந்தார். இதன் காரணமாக அங்கிருந்த அதிகாரிகளிடமும் அம்மா உணவகங்கள் குறித்த தரவுகளையும் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

சமையல் எங்கு செய்யப்படுகிறது, ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் அக்கறையுடன் கேட்டறிந்தார். உணவை மக்களுக்கு தரமாக தொடர்ந்து வழங்க வேண்டும் எனறு அறிவுறுத்தல்களையும் வழங்கினார். மேலும் தேனாம்பேட்டை அம்மா உணவகத்தில் சாப்பிடுபவர்களிடமும் உணவின் தரம் எவ்வாறு இருக்கிறது என்று கேட்டறிந்தார். தொடர்ந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் அடிக்கடி இதுபோல் ஆய்வு நடத்த வேண்டும் எனறு அறிவுறுத்தல்களையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். முதல்வர் வருகை காரணமாக தேனாம்பேட்டை அம்மா உணவகத்தில் அதிகாரிகள் பரபரப்புடன் காணப்பட்டனர்.












Click it and Unblock the Notifications