ராஜ்பவனில் விவேகானந்தர் சிலை திறப்பு... முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
சென்னை: சென்னை ராஜ்பவனில் விவேகானந்தர் சிலையை இன்று மாலை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
விவேகானந்தருக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடர்பு குறித்து முதல்வர் பழனிசாமி இன்று அவரது சிலையை திறந்து வைத்து அற்புதமாக எடுத்துச் சொன்னார். இந்த சிலை திறப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால், சபாநாயகர் தனபால், துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 1893ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற உலக சர்வ சமய மாநாட்டில் சகோதர சகோதரிகளே என்று ஆரம்பித்து சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய உரை உலகையே அவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்ற கொள்கையை நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக்கொள்ளவும் செய்கிறோம் என்று நமது நாட்டின் சமய கொள்கைகளை அன்றே எடுத்துரைத்தவர் சுவாமி விவேகானந்தர்.
சுவாமி விவேகானந்தரை உலககுக்கு அடையாளம் காட்டிய சிகாகோ மாநாட்டில் பங்கேற்க உதவியது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று சொல்வதில் நான் பெருமை கொள்கிறேன். உலக சமய மாநாட்டில் கலந்து கொள்ள தமக்கு வந்த அழைப்பிதழை, சுவாமி விவேகானந்தருக்கு கொடுத்து பங்கேற்க செய்தவர் ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள் தான்.
உலக அரங்கில் இந்து மதத்தின் புகழை தன் சொற்பொழிவால் உலகுக்கு பரப்பிய விவேகானந்தர், இலங்கை மார்க்கமாக 1897ம் ஆண்டு பாம்பன் குந்துக்கல் பகுதியில் இறங்கினார். அவருக்கு மிகச்சிறப்பான வரவேற்பு அளித்தார் மன்னர் பாஸ்கர சேதுபதி. அப்போது பேசிய விவேகானந்தர், இதுவரை வெளிஉலகம் அறியாத சாதாரண துறவியாக இருந்த என்னை, உலகம் அறிந்த ஞானியாக மாற்றியது மன்னர் பாஸ்கர் சேதுபதி என பாராட்டி மகிழ்ந்தார் என்றும் குறிப்பிட்டார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications