Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாகூர் தர்கா சந்தனக்கூடு கந்தூரி விழாவுக்கு 45கிலோ சந்தனக்கட்டைகள்! அரசாணை அளித்த முதல்வர் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாகூர் தர்கா சந்தனக்கூடு கந்தூரி விழாவுக்கு 45 கிலோ சந்தனக் கட்டைகள் கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தமிழ்நாடு வக்பு வாரியம் விடுத்த கோரிக்கையை ஏற்று ஆண்டுதோறும் வனத்துறை இருப்பில் உள்ள சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவுக்கு வழங்கி வருகிறது அரசு.

இது தொடர்பான விவரம் வருமாறு;

 நாகூர் தர்கா கந்தூரி

நாகூர் தர்கா கந்தூரி

நாகூர் தர்கா சாகுல் ஹமீது பாதுஷா நாயகத்தின் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை தமிழ்நாடு அரசு கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் செய்யது காமில் சாஹிப் மற்றும் நாகூர் தர்கா தலைவர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப் காதிரி ஹாசிமி மற்றும் அறங்காவலர்ஹாஜா நஜிமுதின் சாஹிப் ஆகியோரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

தலைமைச் செயலகம்

தலைமைச் செயலகம்


சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து இந்த நிகழ்வு நடைபெற்றது. நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு அரசு வனத்துறையில் இருப்பில் உள்ள சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்கி வருகின்றது.

சந்தனக் கட்டைகள்

சந்தனக் கட்டைகள்

2023-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவினை முன்னிட்டு சந்தன கட்டைகளை கட்டணமின்றி வழங்கும்படி தமிழ்நாடு வக்ஃப் வாரியம், தமிழ்நாடு அரசிடம் வைத்த கோரிக்கையினை பரிசீலனை செய்த முதலமைச்சர் ஸ்டாலின், கந்தூரி திருவிழாவிற்கு தேவைப்படும் 45 கிலோ சந்தனக் கட்டைகளை நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்குவதற்கான ஆணையினை வழங்கினார்.

அமைச்சர்கள்

அமைச்சர்கள்

இந்நிகழ்வில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+