டிசைன் டிசைனாக இனி அரசு கட்டிடங்கள்! அல்ட்ரா மாடர்ன் வடிவமைப்புகள்! புதிய வரைபடங்கள் ரிலீஸ்!
சென்னை: தமிழக அரசின் பொதுப்பணித்துறை மூலம் கட்டப்படவுள்ள அரசுத் துறை சார்ந்த கட்டிடங்களின் புதிய வரைபடங்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் பள்ளிகளின் தோற்றங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு சவால் விடுக்கும் வகையில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டிடங்கள் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதன் விவரம் வருமாறு;

புதிய வரைபடங்கள்
பொதுப்பணித் துறையால் கட்டப்படவுள்ள அரசு பள்ளிக் கட்டடம், மாணவ மாணவியர் தங்கும் விடுதி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், நகர் ஊரமைப்பு இயக்குநர் அலுவலகம் ஆகிய கட்டடங்களின் முகப்புத் தோற்ற வரைபடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.

நவீன முகப்புகள்
அரசின் சிறப்பான பல்வேறு திட்டங்களின் பயன்கள் பலதரப்பட்ட மக்களையும், மாணவர்களையும் சென்றடையும் வகையில் பொதுப்பணித் துறை தரமான பல கட்டுமானங்களை உருவாக்கி வருகிறது. அக்கட்டடங்களின் வரைபடம், பயன்பெறும் துறைகளை கலந்தாலோசித்து தற்போதைய தேவைக்கேற்றவாறு மாற்றி அமைத்து நவீன முகப்பு தோற்றத்துடன் பொதுவான கட்டமைப்பு (Type Design) பொதுப்பணித் துறையால் தயாரிக்கப்பட்டுள்ளது.

புல்வெளிகள்
அதன்படி தனியார் இண்டர்னேஷனல் பள்ளிகளின் தோற்ற வடிவமைப்புக்கு சவால் விடுக்கும் வகையில் இனி அரசுப் பள்ளி கட்டிடங்கள் நவீன முறையில் கட்டப்படவுள்ளன. பள்ளி வளாகத்தில் பசுமை புல்வெளிகள் உள்ளிட்ட உயர் உள்கட்டமைப்புகள் இடம்பெறும் வகையில் டிசைன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடமும் நவீன தோற்றத்தில் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்புகளுடன் டிசைன் உருவாக்கப்பட்டுள்ளன.

அரசுக் கட்டிடங்கள்
பொதுவாக அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் என்றாலே அது பாழடைந்த கட்டிடங்களில் தான் இருக்கும் என அதன் மீது மக்களுக்கு ஒருவித பார்வை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அந்த பிம்பத்தை உடைக்கும் வகையில், இனி அரசு சார்பில் பொதுப்பணித்துறை மூலம் கட்டப்படவுள்ள அனைத்து கட்டிடங்களும் நவீன காலத்திற்கேற்ப புது புது டிசைன்களில் புதி பொலிவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications