தகைசால் தந்தையே! என்னை வாழ்த்துங்கள்! திமுக தலைவராக 5ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் -ஸ்டாலின்
சென்னை: திமுக தலைவராக பொறுப்பேற்று 5ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள பதிவில் 'தகைசால் தந்தையே மேலும் வெல்ல மென்மேலும் வாழ்த்துங்கள்' எனக் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுள்ளார்.
இதுமட்டுமல்லாமல் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து மலர்கள் தூவி அஞ்சலியும் செலுத்தியிருக்கிறார்.

திமுக தலைவர்
திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று இன்றுடன் நான்காண்டுகள் நிறைவடைந்து 5ஆம் ஆண்டு பிறக்கிறது. 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைந்ததை அடுத்து முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் ஆகஸ்ட் 28ஆம் தேதி திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டார் ஸ்டாலின். அதன் பிறகு அவர் சந்தித்த முதல் தேர்தலான 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் திமுகவை அபார வெற்றிபெறச் செய்தார்.

தொடர் வெற்றி
அதைத் தொடர்ந்து அதே ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவை பெருவாரியான இடங்களில் வெற்றிபெற வைத்தார் ஸ்டாலின். பிறகு 2021 சட்டமன்றத் தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் திமுகவை வெற்றிமுகமாக ஆக்கினார் ஸ்டாலின். இதற்கு பின்னணியில் இவரது கடுமையான களப்பணி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் கொரோனா காலத்தில் இவர் முன்னெடுத்த பல உதவித் திட்டங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

முதல்வர்களில் மூத்தவரே
இதனிடையே இன்று அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து மலர்கள் தூவி அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு;
தன்னிகரற்ற தலைவரே!
முதல்வர்களில் மூத்தவரே!
கலையுலக வேந்தரே!
எங்களின் உயிரே! உணர்வே!
தாங்கள் வகித்த தி.மு.க. தலைவர் பொறுப்பில் நான் அமர்ந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.
ஒவ்வொரு அடியும் - நீங்கள் அமைத்த படியில்தான் ஏறுகிறேன். உங்கள் சொற்படியே நடக்கிறேன். அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன்!
மேலும் வெல்ல மென்மேலும் வாழ்த்துங்கள்! இவ்வாறு கூறியிருக்கிறார்.

திமுக ஐடி விங்
திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று வழிநடத்திய கடந்த 4 ஆண்டுகளில் திமுக செய்த சாதனைகள், சமூக நீதியை காக்க தொடரப்பட்ட வழக்குகள் என பலவற்றையும் பட்டியலிட்டு சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டு வருகிறார்கள் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications