2 நாள் பயணமாக ஸ்டாலின் ராமநாதபுரம் விசிட்! 54 இடங்களில் வரவேற்பு! அமைச்சர் ராஜகண்ணப்பன் தடபுடல்!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் 2 நாள் பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு செல்லும் நிலையில் அவருக்கு 54 இடங்களில் உற்சாக வரவேற்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகளை தடபுடலாக கவனித்து வருகிறார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.
தென் மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் பங்கேற்கவும், தங்கச்சிமடத்தில் நடைபெறும் மீனவர்கள் சங்க மாநாட்டில் கலந்துகொள்ளவும் நாளை மறுநாள் ராமநாதபுரம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின். முன்னதாக நாளை மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் அவர் அங்கு ஓய்வெடுக்கிறார்.

அதைத் தொடர்ந்து நாளை மறுநாள் காலை கார் மூலம் சாலை மார்க்கமாக ராமநாதபுரம் புறப்பட்டுச் செல்லும் முதல்வர் ஸ்டாலின், பேராவூரில் நடைபெறும் தென் மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
இந்தக் கூட்டத்தில் இராமநாதபுரம், சிவகங்கை , திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, தேனி வடக்கு, தேனி தெற்கு, மதுரை மாநகர் , மதுரை வடக்கு, மதுரை தெற்கு விருதுநகர் வடக்கு, விருதுநகர் தெற்கு , திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்திய, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு
தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு , கன்னியாகுமரி மேற்கு என 10 மாவட்டங்களை சேர்ந்த திமுகவினர் கலந்துகொள்கிறார்கள்.
சுமார் 20,000 பேர் முதல் 25,000 பேர் வரை கலந்துகொள்வார்கள் என்பதால் அவர்களுக்கான உணவு பொறுப்பை அமைச்சர் ராஜகண்ணப்பன் கவனித்து வருகிறார். நாளை மறுதினம் ராமேஸ்வரத்தில் ஓய்வெடுக்கும் முதல்வர் ஸ்டாலின் வரும் வெள்ளிக்கிழமை அன்று மீனவர்கள் சங்க மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகிறார்.
சுமார் 50,000 மீனவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் முதல்வரின் ராமநாதபுரம் வருகையை ஒட்டி வரவேற்பு ஏற்பாடுகளை மிகவும் தடபுடலாக செய்து வருகிறார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications