தென்பாண்டித் தமிழே! என் சிங்கார குயிலே! பாசத் தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கனிமொழியை மனதார வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின் அவருக்கு பொன்னாடை அணிவித்து பெருமைப்படுத்தியுள்ளார்.

இதேபோல் அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ், செந்தில் பாலாஜி, வெள்ளக்கோவில் சாமிநாதன், உள்ளிட்ட பலரும் கனிமொழியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார்கள்.

கனிமொழி பிறந்தநாள்

கனிமொழி பிறந்தநாள்

திமுக துணைப் பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி கோவையில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று மகிழ்ந்தார். வழக்கமாக சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு சென்று தான் முதல்வரிடம் கனிமொழி பிறந்தநாள் வாழ்த்து பெறுவார். ஆனால் இந்த முறையில் கோவையில் முதல்வரை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றிருக்கிறார்.

கோவையில் சந்திப்பு

கோவையில் சந்திப்பு

இதற்கு காரணம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நேற்றிரவு ஈரோடு சென்ற முதல்வர் ஸ்டாலின் இரவோடு இரவாக கோவைக்கு திரும்பி அங்குள்ள அரசு ஆய்வு மாளிகையில் ஓய்வெடுத்தார். இதன் காரணமாக கோவையிலேயே முதல்வரை கனிமொழி சந்தித்து வாழ்த்து பெற்றுக் கொண்டார். காலை 9.15 விமானத்தில் கோவையிலிருந்து சென்னை திரும்பிய கனிமொழி, சிஐடி காலனி இல்லத்தில் விசிட்டர்களை சந்தித்து அவர்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொள்கிறார்.

மிகவும் எளிமையாக

மிகவும் எளிமையாக

தனது 55வது பிறந்தநாளை மிகவும் எளிமையாக கொண்டாட திட்டமிட்ட கனிமொழி, தனக்கான விளம்பரங்களை கூட தவிர்த்திருந்தார். இதனிடையே கோவையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ், செந்தில் பாலாஜி, வெள்ளக்கோவில் சாமிநாதன், உள்ளிட்ட பலரும் கனிமொழியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார்கள். இதேபோல் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார்கள்.

மகளிர் அணி

மகளிர் அணி

கனிமொழியின் பிறந்தநாளை மிக உற்சாகமாக கொண்டாடி வரும் மகளிர் அணி நிர்வாகிகள் இன்று மாலை பெண்ணினப் பெருமையே என்ற தலைப்பில் வாழ்த்தரங்கம் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். இதற்கு ஜெகத்ரட்சகன் எம்.பி. மற்றும் பீட்டர் அல்போன்ஸ், சுப.வீரபாண்டியன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+