Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக இளைஞரணி வெற்றி நடை! மகன் உதயநிதியை பொதுவெளியில் மனம் திறந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திராவிட மாடல் ஆட்சியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதற்காக கங்கணம் கட்டிக்கொண்டு சிலர் திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

அதேபோல் தனது மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது என மனம் திறந்து பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

Chief Minister Stalin praised Udhayanidhi in DMK youth wing successful running

இன்றைக்கு வளர்ந்து கொண்டிருக்கக்கூடிய திராவிட மாடல் ஆட்சியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதற்காக கங்கணம் கட்டிக்கொண்டு சிலர் திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம், முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையில் வரக்கூடிய தேர்தலில் நீங்கள் எல்லாம் பயன்படுத்தவேண்டும் என்று இந்த நேரத்தில் நான் கேட்டுக்கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எத்தனையோ அணிகள் இருந்தாலும், இதைச் சொல்கின்ற காரணத்தால் மற்ற அணிகளைச் சார்ந்திருக்கக்கூடியவர்கள் கோபித்துக்கொள்ள மாட்டார்கள். எல்லா அணியைவிட ஒரு சிறந்த அணி இருக்கிறது என்றால் அது இளைஞரணி என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும். அது எதார்த்த நிலை. அதை எல்லோரும் புரிந்துகொண்ட நிலைதான், அதனால் தவறாக நினைக்க வாய்ப்பே கிடையாது.

திமுக இளைஞரணி இன்றைக்கு கம்பீரமாகத் தம்பி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரியும். விரைவில், சேலத்தில் மாநாடு நடைபெற இருக்கிறது. அந்த மாநாட்டிற்காக மாவட்டவாரியாகக் கூட்டங்களை அவர் நடத்திக் கொண்டிருக்கிறார். செயல்வீரர் கூட்டங்களை அவர் நடத்திக் கொண்டிருக்கிறார். மாவட்டக் கழக நிர்வாகிகளோடு, கழக முன்னோடிகளோடு ஆலோசனைகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.

மோட்டார் சைக்கிள் பேரணியை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தி, ஒரு எழுச்சியை இன்றைக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். எப்படி அன்றைக்கு இளைஞரணி தேவை, இளைஞரணியை பெருமைப்படுத்த வேண்டும், ஊக்கப்படுத்த வேண்டும், உற்சாகப்படுத்த வேண்டும் என்று பேராசிரியரும், தலைவரும் விரும்பினார்களோ, அதேபோல் இன்றைக்கு நானும், நம்முடைய பொதுச் செயலாளர் அண்ணன் துரைமுருகனும், டி.ஆர்.பாலு போன்றவர்கள் எல்லாம் இளைஞரணி வளர வேண்டும் என்று விரும்பிக் கொண்டு இருக்கிறோம்.

அந்த விருப்பத்திற்கேற்ப அது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்தப் பணி இன்னும் சிறப்பாக செயல்படவேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+