உப்புமா கதை..2024ல் இந்தியாவிற்கே விடியல்..தேர்தலுக்கு தயாராகுங்கள்.. முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
77% பேர் சாப்பிடும் உணவை தராமல் 23% சாப்பிடும் உப்புமாவை தரும் கதைதான் நாட்டில் நடக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:
நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் எழுப்பிய எந்த கேள்விக்கும் பிரதமர் மோடி பதில் சொல்லவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 77% பேர் சாப்பிடும் உணவை தராமல் 23% சாப்பிடும் உப்புமாவை தரும் கதைதான் நாட்டில் நடக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 2021ல் தமிழகத்தில் விடியல் ஏற்பட்டது போல், 2024ம் ஆண்டு இந்தியாவுக்கே விடியல் வரப்போகிறது. லோக்சபா தேர்தலுக்கு தயாராகுங்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதியின் இல்ல திருமண விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். பின்னர் விழாவில் பேசிய அவர், 'தமிழ் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு, தலையெழுத்தை மாற்றியது கலைஞர் பேனா.

கலைஞரின் பேனா தலை குனிந்தபோதெல்லாம் தமிழ்நாடு தலை நிமிர்ந்தது. வள்ளுவர் கோட்டத்தை உருவாக்க பாடுபட்ட பேனாதான் கலைஞர் பேனா. டைடல் பார்க் அமைக்க கையெழுத்து போட்டது தான் கலைஞர் பேனா. குடிசைகளை மாற்றி அடுக்குமாடி குடியிருப்புகளை வித்திட்டது கலைஞர் பேனா. பூம்புகாரை உருவாக்க திட்டமிட்டு அதற்கு கையெழுத்திட்டது கலைஞரின் பேனா. லட்சக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்க காரணமாக இருந்ததும் கலைஞரின் பேனா தான் என்று குறிப்பிட்டார்.
ரூ.15 லட்சம் போடுவதாக பிரதமர் மோடி கூறினாரே. ரூ.15ஆவது போட்டீர்களா?. சேது சமுத்திர திட்டங்கள் குறித்து கேட்டதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்கவில்லை.ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக பிரதமர் மோடி கூறியது குறித்து கேட்டால் பதில் இல்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டதே?என்ன ஆனது?. கனிமொழி, டி.ஆர். பாலு உள்ளிட்டோர் நாடாளுமன்றத்தில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை.
77% பேர் சாப்பிடும் உணவை தராமல் 23% சாப்பிடும் உப்புமாவை தரும் கதைதான் நாட்டில் நடக்கிறது. கருப்புப் பணத்தை மீட்போம் என்றார் பிரதமர். அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. 2021ல் தமிழகத்தில் விடியல் ஏற்பட்டது போல், 2024ம் ஆண்டு இந்தியாவுக்கே விடியல் வரப்போகிறது.2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள், என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக சிவா எம்.பி சில நாட்களுக்கு முன்பு லோக்சபாவில் பேசிய உப்புமா கதை இரு அவைகளிலும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. ஒரு கல்லூரி விடுதியில் தினந்தோறும் மாணவர்களுக்கு உப்புமாவை ஹாஸ்டல் நிர்வாகம் வழங்கி வருகிறது. உப்புமாவை மாணவர்கள் உண்ண முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். அணைத்து மாணவரக்ளும் சேர்ந்து விடுதி நிர்வாகத்திடம் முறையிட்டு, போராட்டத்தை நடத்த முடிவு செய்து உள்ளனர்.
விடுதி மாணவர்கள், நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு அழைத்து அவர்களது வேண்டுகோளை கேட்டு உள்ளனர். அப்போது மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு உப்புமா வேண்டாம் எனவும், அதற்கு மாற்றாக வேறு உணவு வேண்டும் எனவும் கேட்டு உள்ளனர்.
விடுதி நிர்வாகம் என்ன உணவு வேண்டும் என ஒரு வாக்கெடுப்பு நடத்தி உள்ளது. அந்த வாக்கெடுப்பில், 7 சதவீத மாணவர்கள் ஆம்லெட் வேண்டும் என கேட்டனர். 18 சதவீதம் பேர் ஆளு பரோட்டா வேண்டும் எனவும், 13 சதவீத மாணவர்கள் பூரிக்கும் வாக்களித்தனர்.
20 சதவிகித பேர் மசாலா தோசை வேண்டும் எனவும், 19 சதவீத பேர் இட்லி வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். 23 சதவீத மாணவர்கள் உப்புமாவிற்கே மீண்டும் வாக்கு அளித்துள்ளனர். இதனால் அதிக வாக்கு பெற்று உப்புமா ஜெயித்து விட்டது.
விடுதி நிர்வாகமும் மீண்டும் உப்புமாவையே தரலாம் என முடிவு எடுத்து விட்டது. இது போலத்தான் பாஜகவின் கதையும். எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இல்லாததால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டது. ஆனால் இந்த முறை அது நடக்காது. எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்க்கும் என்று கூறினார். அதை நினைவூட்டும் வகையில் முதல்வர் ஸ்டாலின், 77% பேர் சாப்பிடும் உணவை தராமல் 23% சாப்பிடும் உப்புமாவை தரும் கதைதான் நாட்டில் நடக்கிறது என்றும் 2024ஆம் லோக்சபா தேர்தலில் நாட்டிற்கே விடியல் வரும் என்றும் கூறியுள்ளார்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications