விஜய்க்கு ரூ. 624 கோடி சொத்து இருக்கு! 1.28 லட்சம் கடனும் இருக்கே! அவரால் மட்டும் அடைக்க முடியாதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய்க்கு ரூ 624 கோடி அசையும், அசையா சொத்துகள் இருக்கிறது. அது போல் அவருக்கு சொகுசு கார்கள் இருந்தாலும், அவர் பெயரில் டிவிஎஸ் எக்சல் வண்டிதான் சொந்தமாக இருக்கிறது என தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

திரையுலகில் கோடிகளை அள்ளிய 'தளபதி' இப்போது கோட்டையை ஆளும் 'முதலமைச்சர்' விஜய் இன்று 52-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பாக்ஸ் ஆபீஸை அதிரவைத்த ஒரு சூப்பர்ஸ்டார், மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குப் பின் நேரடியாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருப்பது சாதாரண விஷயமல்ல.

joseph vijay assets

சினிமாவில் ஒரு படத்திற்கு 200 கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கிய விஜய், இன்று மக்களின் சேவகனாக மாதத்திற்கு வெறும் 2 லட்சம் ரூபாய் மட்டுமே முதலமைச்சர் சம்பளமாகப் பெறுகிறார்.

இந்நிலையில், சமீபத்திய சட்டசபைத் தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டபோது அவர் தாக்கல் செய்த அதிகாரப்பூர்வ தேர்தல் வேட்புமனுவின் (Nomination Affidavit) அடிப்படையில், அவரது பிரம்மாண்ட சொத்து பட்டியலை பார்ப்போம்!

விஜய்யின் பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு பிளாக்பஸ்டர் படத்தின் வசூல் சாதனையைப் போன்றது. வேட்புமனுத் தாக்கலின்படி:

2020-21 நிதியாண்டு: விஜய்யின் ஆண்டு வருமானம் வெறும் ரூ. 8.04 கோடியாக இருந்தது.

2024-25 நிதியாண்டு (அரசியல் வருகைக்கு முன்): இது அசுரவளர்ச்சி அடைந்து, ஒரே ஆண்டில் ரூ. 184 கோடி ஆக எகிறியது!

மொத்த சொத்து மதிப்பு: விஜய்யின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ. 624 கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் தன் கைமாற்றாக, குடும்பத்தினருக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் பல கோடிகளை கடனாக வழங்கியுள்ளார். அந்த சுவாரஸ்யமான பட்டியல் இதோ:

மனைவி சங்கீதா: ரூ. 12.06 கோடி

தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்: ரூ. 3.02 கோடி

தாய் ஷோபா: ரூ. 87 லட்சம்

மகன் ஜேசன் சஞ்சய்: ரூ. 8.78 லட்சம்

மகள் திவ்யா சாஷா: ரூ. 4.60 லட்சம்

என். ஆனந்த் (தவெக பொதுச்செயலாளர் & நண்பர்): ரூ. 3 கோடி

தயாரிப்பாளர் வி. ரவிச்சந்திரன்: ரூ. 5 கோடி

தங்கம், வெள்ளி மற்றும் வைரங்கள்

நகை மற்றும் மதிப்புமிக்க பொருட்களிலும் முதல்வர் விஜய்யின் குடும்பம் பின்தங்கவில்லை.

விஜய்யிடம் உள்ளவை: ரூ. 1.20 கோடி மதிப்புள்ள 883 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள்.

மனைவி சங்கீதாவிடம் உள்ளவை: ரூ. 4.07 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், ரூ. 1 கோடி மதிப்புள்ள ஜொலிக்கும் வைர நகைகள் மற்றும் ரூ. 5.10 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள்.

அரசியல் களத்தில் புயலைக் கிளப்பிய விஜய், தனது கல்லூரிப் படிப்பை முழுமையாக முடிக்கவில்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் பி.எஸ்.சி (B.Sc) சேர்ந்த அவர், முதலாம் ஆண்டிலேயே படிப்பை நிறுத்திவிட்டு சினிமாவுக்குள் நுழைந்தார்.

இருப்பினும், தொழில்துறையில் அவர் முத்திரை பதித்துள்ளார். தற்போது, 'விஜய் வித்யாசிரம்' பள்ளியின் தாளாளராகவும் (Correspondent), 'ஜெயா நகர் ப்ராபர்ட்டி பிரைவேட் லிமிடெட்' (Jaya Nagar Property Pvt Ltd) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும் (Managing Director) அவர் செயல்பட்டு வருகிறார்.

கொடைக்கானல் வில்பட்டி பகுதியில் இரு எஸ்டேட்டுகள் இருக்கின்றன. ஐஓபி வங்கியில் ரூ 213 கோடி, ஆக்ஸில் வங்கியில் ரூ 57 கோடி, எச்டிஎஃப்சி வங்கியில் ரூ 77 லட்சம் விஜய் பெயரில் டெபாசிட்டாக உள்ளது.

சங்கீதாவின் பெயரில் ரூ 10.43 கோடி டெபாசிட் வைத்திருக்கிறார். கடைசியாக விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கு அவருக்கு ரூ 275 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது.

பிஎம்டபிள்யூ 2, லெக்சஸ், டொயோட்டா வெல்ஃபயர் உள்ளிட்ட கார்கள் இருக்கு ஆனால் விஜய் பெயரில் இல்லை. ஆனால் டிவிஎஸ் எக்சல் சூப்பர் வாகனம் மட்டும் விஜய் பெயரில் உள்ளது.

பாக்ஸ் ஆபீஸில் கோடிகளை அள்ளிக் குவித்த ஒரு டாப் ஸ்டார், இன்று மாத சம்பளம் 2 லட்சம் ரூபாய் வாங்கும் முதலமைச்சராகத் தன் 52-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கோலிவுட்டின் உச்சத்தில் இருந்து கோட்டையின் உச்சத்திற்கு வந்திருக்கும் விஜய்யின் இந்த சொத்து விவரங்கள், அவரது நிஜ வாழ்வின் பிரம்மாண்டத்தை அப்படியே பிரதிபலிக்கின்றன! இத்தனை கோடி சொத்து இருந்தும் என்ன பிரயோஜனம், ரூ 1.28 லட்சம் கடன் இருக்கே! அதாங்க வெள்ளை அறிக்கையில் வெளியிட்டாங்களே! தனி நபர் கடன் ரூ 1.28 லட்சம் இருக்குனு! அதை சொல்றேன்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+