காஞ்சிபுரம் சென்ற முதல்வர் விஜய்.. தொழிற்சாலைகளில் பேட்டரி காரில் சென்று ஆய்வு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக ஆட்சியமைத்து 2 மாதங்கள் நிறைவடைந்து விட்டது. முதலீடுகளை ஈர்ப்பதில் தவெக சொதப்பி வருவதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகிறார்கள். இந்நிலையில் முதலமைச்சர் விஜய் காஞ்சிபுரத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். காஞ்சிபுரத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தி மையங்கள், சிப்காட் தொழிற்சாலை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முதலமைச்சர் விஜய் தினசரி தலைமை செயலகத்தில் அதிகாரிகள், அமைச்சர்களுடன் கலந்தாலோசனை செய்கிறார். தொழில்துறையினர், பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்களை சந்தித்து வருகிறார். மேலும் அவ்வபோது வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்து வருகிறார். சென்னையை விட்டு மற்ற மாவட்டங்களுக்கு விஜய் செல்வது மிகவும் அரிது. முதலமைச்சரான பிறகு அவர் திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு சென்றார்.

Vijay Kanchipuram

இந்நிலையில் விஜய் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். இருங்காட்டுக்கோடை, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஒரகடத்தில் உள்ள சிப்காட் தொழில் வளர்ச்சி மையத்தில் விஜய் பார்வையிட்டார். அதில், டெய்ம்லர் பஸஸ் இந்தியா என்கிற நிறுவனம் சார்பில் வர்த்தக வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ், பாரத் பென்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கான பேருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் தொழிற்சாலைக்கு விஜய் சென்றார். ஒரகடம் பகுதியில் உள்ள நிசான் கார் உற்பத்தி தொழிற்சாலையையும் அவர் பார்வையிட்டார். ஸ்ரீபெரும்புதூர் அருகே மாம்பாக்கத்தில் செயல்படும், பிரான்ஸ் நாட்டு நிறுவனமான செயின் கோபைன் கண்ணாடி உற்பத்தி ஆலையிலும் விஜய் ஆய்வு செய்தார்.

செயின்ட் கோபைன் நிறுவனத்தில் பேட்டரி வாகனத்தில் சென்று ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், நிறுவன வளாகத்தில் மரக்கன்று நட்ட பின் அந்நிறுவனம் தயாரித்த கண்ணாடியிலும் கையெழுத்திட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+