எந்த எந்த இடத்தில் முதல்வர் மருந்தகம் செயல்படும்? சென்னையில் இங்கெல்லாம் பார்மஸி உண்டு.. மறக்காதீங்க
சென்னை: தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்.. இதில் சென்னையில் மட்டும் சென்னையில் 39 இடங்களில் முதல்வர் மருந்தகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எந்த எந்த இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் செயல்பட போகின்றன தெரியுமா?
இந்த மருந்தகங்களில் குறைந்த விலையில் ஜெனரிக் மற்றும் பிற மருந்து, மாத்திரைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மருந்தகங்களில் ரூ.70-க்கு கிடைக்கும் மாத்திரை, முதல்வர் மருந்தகத்தில் வெறும் ரூ.11 மட்டுமே கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா பிறந்தநாள்
முன்னதாக, இந்த திட்டம் குறித்து பேசிய திமுக மருத்துவ அணி செயலரும், எம்எல்எவுமான எழிலன் சொல்லும்போது, "கூட்டுறவு துறையும், தமிழக மருந்துகள் சேவைகள் கழகமும் இணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன. தமிழக அரசின் சார்பில், 3 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. அம்மா மருந்தகங்களை மூடும் வாய்ப்பு இல்லை. கூட்டுறவு மருந்தகம், அம்மா மருந்தகம் போன்றவற்றுடன் முதல்வர் மருந்தகம் என ஒரு ஆரோக்கியமான போட்டி இருக்கும்.
அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் மருந்துகள் நிறுத்தப்படாது. குறிப்பாக, 762 வகையான மருந்துகள், முதல்வர் மருந்தகங்களில் விற்பனை செய்யப்பட உள்ளன. மக்களுக்கான திட்டங்களை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் கூட துவக்கி வைக்கலாம், அதில் தவறில்லை" என்று கூறியிருந்தார்.
சென்னையில் 33 இடங்கள்
இந்நிலையில், தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்.. இதில், மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 , சென்னையில் 33 இடங்களிள் மருந்தகங்கள் செயல்பட உள்ளன. முதல்வர் மருந்தகம் திறக்கும் தொழில் முனைவோருக்கு 3 லட்சம் ரூபாய் வரை அரசு மானியமாக வழங்குகிறது. இதில் 50 சதவீத தொகையானது ரொக்கமாகவும், மீதம் அனைத்தும் மருந்துகள் வடிவத்திலும் வழங்கப்படுகிறது.
சென்னையில் முதல்வர் மருந்தகம் செயல்படும் இடங்கள் இவைகள்தான்
- கொன்னூர் நெடுஞ்சாலை, அயனாவரம்.
- ஆர்.வி.நகர் கடைசி மெயின் சாலை, கொடுங்கையூர்.
- மன்னார்சாமி கோவில் தெரு, புளியந்தோப்பு.
- திருப்பதி கூடல் ரோடு, கலைவாணர்நகர், அம்பத்தூர்.
- கோவிந்தன் தெரு மேட்டுப்பாளையம், அருந்ததியர் நகர்.
- காந்தி தெரு, கே.எம்.நகர், கொடுங்கையூர்
- கற்பகவிநாயகர் கோவில் தெரு, சென்னை.
- நாட்டு பிள்ளையார் கோவில் தெரு, ஏழுகிணறு.
- கல்யாணபுரம் தெரு, சூளைமேடு.
- சாமியர்ஸ் சாலை, நந்தனம்.
- லேண்டன்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம்.
- காமராஜபுரம், பாண்டிதுரை தெரு, வேளச்சேரி
- வீரராகவராவ் தெரு, திருவல்லிக்கேணி.
- மாநகராட்சி கட்டிடம், சின்னமலை, வேளச்சேரி மெயின் ரோடு.
- நாகேஷ் தியேட்டர் அருகில், தியாகராயநகர்.
- சுந்தரம் தெரு, ராஜாஅண்ணாமலைபுரம்.
- லஸ் சர்ச் ரோடு, மயிலாப்பூர்.
- செல்லியம்மன் நகர் பிரதான சாலை, துர்கா நகர், தாம்பரம்.
- பாரதிநகர் 2-வது தெரு, பி.வி.என். ரேஷன் கடை, பல்லாவரம் தாலுகா
- சாந்திநகர், 3-வது தெரு, குரோம்பேட்டை.
- மந்தைவெளி தெரு, புழுதிவாக்கம் பஸ் நிலையம்.
- புதிய பெத்தானியா நகர் பிரதான சாலை, வளசரவாக்கம்.
- வானகரம் பிரதான சாலை, ஆலப்பாக்கம்.
- பதுவாஞ்சேரி பிரதான சாலை, பெரியார் நகர், மாடம்பாக்கம்.
- காமராஜ் நெடுஞ்சாலை, பழைய பெருங்களத்தூர்.
- 10-வது பிளாக், கிழக்கு முகப்பேர்.
- வ.உ.சி. மக்கரம் தோட்டம், கொளத்தூர்.
- 15-வது பிரதான சாலை, அண்ணாநகர் மேற்கு.
- 80 அடி சாலை, குமரன் நகர், பெரவள்ளூர்.
- 4-வது பிரதான சாலை, அயனப்பாக்கம்.
- துலுக்கானத்தம்மன் கோவில் தெரு,வெங்கடபுரம், அம்பத்தூர்.
- 3-வது பிரதான சாலை, நாராயணசாமி கார்டன், சேலவாயல்.
- பெருமாள் கோவில் தெரு, சதுமா நகர், திருவொற்றியூர்.
- 2-வது பிரதான சாலை, மாத்தூர், எம்.எம்.டி.ஏ.
- ஆண்டியப்பன் தெரு, வண்ணாரப்பேட்டை.
- 8-வது தெரு, கடற்கரை சாலை, எண்ணூர்.
- பாலசுப்பிரமணியம் சாலை, பெரியார் நகர், கொளத்தூர்.
-பி.என்.ஆர். சாலை, பழைய வண்ணாரப்பேட்டை, பெரியார் நகர், கொளத்தூர்.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications