அடித்து ஆட தொடங்கும் நயினார் நாகேந்திரன்.. கூடாரத்தையே காலி செய்ய திட்டம்? இது லிஸ்ட்லேயே இல்லையே

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவின் தமிழக தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் கட்சி ரீதியாக முக்கியமான சில நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தற்போதைய சட்டமன்றக் கட்சித் தலைவராக உள்ளார். 19 மே 2001 முதல் 12 மே 2006 வரை தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் அதிமுக சார்பாக தமிழக அமைச்சராகப் பணியாற்றினார். அவர் 3 ஜூலை 2020 முதல் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு (TNBJP) துணைத் தலைவராக இருந்தார். அவர் 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் திருநெல்வேலி தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகவும், 2021 பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகவும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில்தான் இத்தகைய அனுபவம் மிக்க நயினார் நாகேந்திரன் தமிழக பாஜகவின் தலைவராகி உள்ளார். அண்ணாமலை இருந்தால் அதிமுக - பாஜக கூட்டணி அமைவது கஷ்டம் என்று டெல்லி இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. 2026 மாநிலத் தேர்தலில் கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றால் கூட்டணி நெருக்கமாக இருக்க வேண்டும். அதுமட்டுமன்றி பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் முகமும் கவுண்டர் ஜாதியாக இருப்பதை பாஜக விரும்பவில்லை. எடப்பாடி அண்ணாமலை ஒரே ஜாதி. அதுவே பாஜகவிற்கு வேறு ஜாதியை சேர்ந்தவர் தலைவராக இருந்தால் அது கூட்டணிக்கு இன்னும் வலு சேர்க்கும். முக்கியமாக தென் மண்டலத்தில் கூட்டணிக்கு பலம் தரும். இதை எல்லாம் கருத்தில் கொண்டு அண்ணாமலையை மாற்றி நயினார் நாகேந்திரனை உள்ளே கொண்டு வந்துள்ளனர்.

Chief Nainar Nagendran to make huge changes in BJP after taking Annamalai place

முக்கிய நடவடிக்கை

பாஜகவின் தமிழக தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் கட்சி ரீதியாக முக்கியமான சில நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

1. கட்சி ரீதியாக எந்த தலைவர் வந்தால் தனக்கு ஏற்ற நிர்வாகிகளை நியமிப்பது வழக்கம். அதாவது கடந்த தலைவர் நியமித்த நிர்வாகிகளை மாற்றுவார்கள்.

2. அந்த வகையில் நயினார் நாகேந்திரனும் அண்ணாமலை நியமித்த நிர்வாகிகளை மாற்ற உள்ளார்.

3. அண்ணாமலைக்காக பணியாற்றிய.. கட்சியில் மற்ற தலைவர்களை மதிக்காத சில நிர்வாகிகளை கூண்டோடு தூக்கும் திட்டத்தில் நயினார் இருக்கிறாராம்.

4. அதோடு ஜாதி ரீதியாக பரவலாக பல தரப்பினருக்கு பதவி வழங்கவும் நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளாராம்.

5. ஒரு சிலர் இன்னமும் முன்னாள் தலைமைக்கு விசுவாசமாக இருப்பதால் அவர்களை தூக்கும் திட்டத்திலும் நயினார் இருக்கிறாராம்.

6. சென்னையில் ரவுடிகள் பலர் கட்சியில் சேர்ந்ததாக புகார்கள் உள்ளன. இதை கணக்கெடுப்பு மேற்கொண்டு சரி செய்ய.. பலரை நீக்கவும் நயினார் திட்டமிட்டு உள்ளாராம்.

7. பாஜகவின் பல வருட திட்டம் பூத் கமிட்டி அமைப்பது. அண்ணாமலை காலத்தில் பூத் கமிட்டிகள் அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் 2026 லோக்சபா தேர்தலை மனதில் வைத்து பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை வேகப்படுத்த நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளாராம்.

8. இதை மனதில் வைத்தே கட்சியில் நிர்வாகிகள் குழு, மாவட்ட தலைவர்கள் குழு விரைவில் கூண்டோடு மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதை எல்லாம் மே இறுதிக்குள் செய்யும் திட்டத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+