பணம் கொடுக்கல் வாங்கல் புகார்கள்.. டிஜிபிக்கு தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் கடிதம்
சென்னை: பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான புகார்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் மோசடி குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என, காவல் துறையினருக்கு அறிவுறுத்தும்படி, காவல்துறை டி.ஜி.பி.க்கு தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் அனுப்பியிருக்கிறார்.
நிலம் விற்பதாகக் கூறி, 28 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன் ஜாமீன் கோரி குற்றம் சாட்டப்பட்டவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, பணம் கொடுக்கல் - வாங்கல் தொடர்பான உரிமையியல் விவகாரம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் 420-வது பிரிவின் கீழ் மோசடி குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்வதை தவிர்க்க அறிவுறுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டி, டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டிருந்தது.
இது சம்பந்தமாக உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கண்காணிப்பு குழுவை அமைக்க டிஜிபிக்கு உத்தரவிட்ட மதுரைக் கிளை, இதற்கு உதவியாக செயல்பட தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கும் அறிவுறுத்தியிருந்தது.

இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி, பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான உரிமையியல் பிரச்னைகளில் மோசடி குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்வதை தவிர்க்கும்படி, காவல் துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும் என டி.ஜி.பி.க்கு தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், மோசடி வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாகவும், அதனால் மோசடி குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யும் போது விழிப்புடன் இருக்கும்படி காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் டி.ஜி.பி.யை தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா கேட்டுக் கொண்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications