முதல்வர் டேபிளில் லிஸ்ட்.. அமைச்சரவை மாற்றத்தில் 4 பாயிண்ட்! துள்ளும் ஜூனியர்கள்..பதறும் ஜூனியர்கள்!
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாதம் அமெரிக்கா செல்ல இருக்கும் நிலையில் தலைமைச் செயலர் முதல்வரின் தனிச்செயலாளர் என பல்வேறு அதிரடி மாற்றங்கள் இருந்தது. இந்நிலையில் விரைவில் தமிழக அமைச்சரவையிலும் மாற்றம் இருப்பதாக கூறப்படும் நிலையில் 4 முக்கிய பாயின்ட்டுகள் அந்த மாற்றத்தில் இருக்கும் என்கின்றனர் தலைமை செயலக வட்டாரத்தினர்..
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை இரண்டு முறை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு அதிகாரிகளின் மாற்றம் நிகழ்ந்தது.

உச்சபட்சமாக தமிழகத்தின் தலைமைச் செயலரும் மாற்றப்பட்டார். அதற்கு அடுத்ததாக முதல்வர் தனிச் செயலர்களும் அடுத்தடுத்து பதவி மற்றும் செய்யப்பட்டனர். இப்படியாக தமிழக அரசில் என்ன நடக்கிறது என விசாரித்த போது அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் சிலரை நீக்குவதற்கான நடவடிக்கை தான் இது என்கின்றனர்.
இது தொடர்பாக விசாரித்த போது இன்னும் சில நாட்களில் தமிழக அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் இருக்கப் போகிறது. ஏற்கனவே நீண்ட காலமாக யூகமாகவே இருக்கும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக நியமனம் செய்யப்படுவதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறது என்கின்றனர். தற்போதைய சூழலில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக கோரிக்கை வலுத்திருக்கிறது..ஆனால் பழுக்கவில்லை என முதல்வர் கூறி இருந்தார்.
எனவே அந்த சூழல் தற்போது பழுத்துள்ளது என்கின்றனர் திமுகவினர். அது மட்டும் அல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ஒரு சில அமைச்சர்கள் மீது அதிருப்தி குரல்கள் வந்திருக்கிறது. மேலும் ஏற்கனவே பதவியில் இருக்கும் அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகளை கண்டு கொள்வதில்லை. ஒரு சில முறைகேடு புகார் என தலைமைக்கு புகார்கள் வந்திருக்கிறது. இதை அடுத்து அவர்கள் பதவி பறிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
மேலும் சிலருக்கு புதிதாக அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட இருக்கிறது. சில அமைச்சர்கள் துறை ரீதியான மாற்றத்தை எதிர்கொண்டுள்ளனர். அது மட்டும் அல்லாமல் சில மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் அமைச்சர்களும் பொறுப்பு அமைச்சர்களும் நியமனம் செய்யப்பட உள்ளனர். அந்த வகையில் திருவள்ளூர்,சேலம், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் ஏற்கனவே சில மாவட்டங்களில் எம்பிக்களாக இருப்பவர்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அங்கிருக்கும் எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இப்படியாக பல்வேறு மாற்றங்கள் அமைச்சரவையில் இருக்கும் என்கின்றனர். எல்லாவற்றிற்கும் காரணம் 2026 சட்டமன்ற தேர்தல்தான் எனக் கூறுகின்றனர் திமுகவினர். சட்டமன்றத் தேர்தலை எதிர் கொள்ளும் போது தங்கள் மாவட்டத்திற்கு எதுவும் செய்யவில்லை அல்லது நிர்வாகிகளை கண்டுகொள்ளவில்லை என எந்தவித புகாரும் வந்து விடக்கூடாது என ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்டு இருக்கிறாராம் முதலமைச்சர் ஸ்டாலின்.
அந்த வகையில் அனைத்து மாவட்டங்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையிலேயே தற்போது அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். முதலமைச்சர் பயணம் மேற்கொள்ள இருக்கும் ஒரு சில தினங்களுக்குள் அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர். அதே நேரத்தில் தங்களுக்கு பதவி கிடைக்கும் என ஒரு சில ஜூனியர்கள் மிகுந்த எதிர்பார்ப்பிலும், தங்கள் பதவி பறிபோகலாம் என ஒரு சில சீனியர்கள் பரபரப்பிலும் இருக்கிறார்கள் என்கின்றனர் திமுகவினர்..
-
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி












Click it and Unblock the Notifications