சிக்கலில் சிவசங்கர் பாபா.. பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து.. அரசே ஏற்று நடத்த அதிரடி பரிந்துரை!
சென்னை: சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் பள்ளிக் கல்வித் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும் இந்த பள்ளியை தமிழக அரசே ஏற்று நடத்தவும் கோரிக்கை எழுந்துள்ளது.
Recommended Video
கேளம்பாக்கத்தில் 64 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வரும் பள்ளி சுஷில் ஹரி சர்வதேச பள்ளி. இதை நடத்தி வருபவர் சிவசங்கர் பாபா. இவர் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.
இவரது லீலைகள் குறித்து முன்னாள் மாணவிகள் புகார் கூறியதை அடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

சிவசங்கர் பாபா
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் திடீரென சிவசங்கர் பாபா உத்தரகாண்டிற்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீஸார் உத்தரகாண்டில் அவரை கைது செய்ய சென்றனர். இந்த நிலையில் அவர் இன்று டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

பிள்ளைகள்
இதனிடையே சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான பள்ளியில் படிக்கும் தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் வேறு பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள். அது போல் அந்த பள்ளியில் நடந்த பாலியல் தொல்லைகளுக்கு சில ஆசிரியைகளும் உடந்தை என கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பள்ளியில் சிவசங்கர் பாபாவின் அறைகள், நடன அரங்கங்களில் சிபிசிஐடி போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

சுஷில் ஹரி
இந்த நிலையில் சுசில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் இந்த பள்ளியை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறைக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தகவல்கள்
மேலும் இந்த பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் மாணவர்கள் சேர பள்ளிக் கல்வித் துறை தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் பரிந்துரை செய்துள்ளது. ஏற்கெனவே பத்ம சேஷாத்ரி பள்ளியை அரசே ஏற்று நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications