"விஜய் மாமா.. விஜய் மாமா.." மரிய வில்சன் சொன்னதும் அதிர்ந்த சட்டசபை.. அப்போ முதல்வர் தந்த ரியாக்ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய தினம் தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு துறைகள் குறித்தும் அவர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், பாசமுடன் விஜய் மாமா என அழைக்கும் குழந்தை செல்வங்கள் குறித்தே முதல்வர் விஜய் நாள்தோறும் யோசித்து வருவதாக குறிப்பிட்டார்.

தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார். முன்னதாக கடந்த மார்ச் மாதம் அப்போதைய திமுக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தது. அதன் பிறகு நடந்த தேர்தலில் தவெக அரசு வென்று ஆட்சியை அமைத்துள்ள நிலையில், தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

Tamil nadu budget 2026 Tamil nadu Vijay

மாநில நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். குறிப்பாக, பள்ளி கவ்வி மற்றும் உயர்கல்வி சார்ந்து பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். மேலும், நீட் தேர்வுக்கு எதிராகவே தமிழக அரசு உள்ளதாகவும் +2 அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அவர் மேலும், "விஜய் மாமா.. விஜய் மாமா என்று பாசம் பொங்க அழைக்கும் குழந்தை செல்வங்கள் பற்றி நாள் தோறும் சிந்திப்பவர் முதல்வர் விஜய். அந்த குழந்தை செல்வங்கள் தினமும் வரும் அங்கன்வாடி மையங்களில் அவர்களுக்கான ஆரம்பக்கால பராமரிப்பு மற்றும் சேவையை நல்ல முறையில் வழங்கிடவும் மையங்களுக்கு வரும் குழந்தைகள் மகிழ்ச்சி உடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பதை உறுதி செய்யவும் பாதுகாப்பான குடிநீர், மின்சார இணைப்பு, கழிவறை வசதிகளை கொண்ட 500 அங்கன்வாடி மையங்கள் நடப்பாண்டில் கட்டப்படும்" என்றார்.

Tamil nadu budget 2026 Tamil nadu Vijay

குழந்தைகள் விஜய் மாமா.. விஜய் மாமா என பாசத்தோடு அழைப்பதாக மரிய வில்சன் சொன்ன போது சட்டசபை அதிர்ந்தது. அனைத்து தவெக எம்எல்ஏக்களும் மேஜைகளை தட்டி வரவேற்றனர். அப்போது விஜய்ய பொறுமையாக பட்ஜெட் அறிவிப்புகளை கேட்டு வந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+