நான் பாசம் இல்லையா.. குணமா வாய்ல் சொல்லோனும்.. சாப்பாடுதான் முக்கியம்.. 2018-இல் வைரலான குட்டீஸ்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குழந்தைகளும் சாதாரணமாக செய்யும் சேட்டைகளை வீடியோவாக எடுத்து போட்டாலும் அது வைரலாகிறது. அதுவும் மழலை கொஞ்சும் தமிழில் பேசும் வீடியோக்கள் வைரலாகி இணையதளத்தில் ஒரு ரவுண்ட் வருகின்றன.

பெரியோர் முதல் சிறியவர்கள் டிவியை காட்டிலும் திருப்திகரமான பொழுதுபோக்கு சாதனம் என்றால் அது செல்போன்தான். அதிலும் டப்ஸ்மாஷ்கள், டிக்டாக் ஆப்புகள் என ஏராளமானவை வந்துவிட்டன.

இதில் அனைவரும் பேசி தங்களது திறமையை உலகுக்கு காண்பிக்கின்றனர். அந்த வகையில் குழந்தைகள் நம் வீடுகளில் சாதாரணமாக பேசும் வசனங்கள் புகழ்பெறுகின்றன. இதுபோல் இந்த ஆண்டின் இறுதியில் புகழ்பெற்ற குழந்தைகளை பார்ப்போம்.

[2018 பிளாஷ் பேக்]

வீடியோ வைரல்

இன்னொரு குழந்தை கடந்த ஜூலை மாதம் ஒரு வீடியோ மூலம் வைரலானது. அதில் அவரது தாய் அம்மாவுக்கு அக்கா மேல ரொம்ப பாசம் என சொல்ல, அதற்கு அந்த பொடியன் அப்போ நானு.. நானு.. என்னது நீனு என அமமா கேட்கஸ அதற்கு அந்த பொடியன் அப்போ நான் பாசம் இல்லையா என கேட்கிறான். மீண்டும் அந்த தாய், தனக்கு அக்கா மீது பாசம் என சொல்ல அதற்கு அந்த சுட்டி பையன் அப்போ நான் பாசம் இல்லையா என அழுகிறான். இந்த வீடியோவும் வைரலானது.

குணமா வாய்ல சொல்லோனும்

அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் கோவையை சேர்ந்த ஸ்மித்திகா என்ற குழந்தை அவர் அம்மாவுக்கே புத்தி சொன்னாள். ஸ்மித்திகா தவறு செய்ததற்கு அவரது தாய் லேசாக அடித்து விட்டார். அதற்கு அந்த குழந்தையோ தப்பு செய்தா அடிக்கிறதா, அடிக்காம குணமா வாய்ல சொல்லோனும் என புத்தி கூறியது.

வைரலானது

வைரலானது

அதற்கு அந்த அம்மா எதுக்கு இப்படி நீ அழற என கேட்டதற்கு அடிச்சா அழாம என்ன பண்ணுவாங்க நீ சொல்லு என குழந்தை சொல்ல அதற்கு சேட்ட பண்ணா அடிக்காம என்ன செய்வாங்க நீ சொல்லு தாய் கேட்க மீண்டும் அக்குழந்தை குணமா வாய்ல சொல்லனும் என்கிறது. இது வைரலானது.

சாப்பிட்டு வரேன்

சாப்பிட்டு வரேன்

இதையடுத்து நேற்று முதல் இன்னொரு குட்டி பையன் வைரலாகி வருகிறான். அந்த வீடியோவில் அந்த சிறுவனிடம் இளைஞர் அணி சங்கத்துல சேர்ந்துட்டே சரியா என்று யாரோ கேட்கின்றனர். அதற்கு அந்த சிறுவனோ ஹூம் என்கிறார். போய் உங்கம்மாகிட்ட ரூ. 2000 வாங்கிவிட்டு வா என்கிறார். ம்ம் என்று சொல்லிவிட்டு அந்த சிறுவன் செல்கிறான். அதற்கு அந்த நபரோ போய்விட்டு வருவியா இல்லையா என கேட்க சாப்பிட்டு வரேன் என்கிறான் சிறுவன்.

சாப்பிட கூடாதா

சங்கம் முக்கியமா இல்லை சாப்பாடு முக்கியமா என அவர் கேட்க அதற்கு அந்த சிறுவன் சாப்பாடு முக்கியம் என்கிறார். சங்கத்தில உறுப்பினர் நீ, சாப்பாடு முக்கியம்ங்கற என அந்த நபர் கேட்க அதற்கு சிறுவனோ சாப்பாடுதான்... அப்போ எனக்கு பசிக்கும் இல்ல நான் சாப்பிட கூடாதா? என அழுது கொண்டே கேட்கிறான். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+