சரியாக பேச முடியாத மகன்.. ஏன் குழந்தைக்கு பேச்சு வரல? துளைத்தெடுத்த கணவர்! டக்னு மனைவி செய்த காரியம்
சென்னை: இந்தியாவில் குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. கணவனை மனைவி கொல்வது, அல்லது மனைவியை கணவன் கொலை செய்வது, அல்லது இருவரில் யாராவது ஒருவர் கள்ளக்காதலுக்காக தாங்கள் பெற்ற குழந்தைகளையே கொல்வது என சொல்லமுடியாத அளவுக்கு வன்முறை தலைவிரித்தாடுகின்றன.... இளம் தம்பதிகளிடம் புரிதல் இல்லாமல் போவது, தற்கொலைகளுக்கு வித்திட்டு விடுகின்றன.. அந்தவகையில், இளம்தாய் எடுத்த முடிவு, ஆந்திர மாநிலத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த சாய் லட்சுமி என்பவர் ஹைதராபாத்தில் வசித்து வந்தார். இவருக்கு 27 வயதாகிறது..

ஹைதராபாத்திலேயே சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றும் அனில் குமார் என்ற 30 வயது நபருடன் 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சேதன் கார்த்திகேயா மற்றும் லாஸ்யத வள்ளி (2) என்ற இரட்டை குழந்தைகள் பிறந்தனர்.
இதில் மகன் சேதன் கார்த்திகேயாவுக்கு பிறந்ததிலிருந்தே பேச்சு தெளிவாக வரவில்லை என்று கூறப்படுகிறது.. இது தொடர்பாக அனில் குமார், மனைவியுடன் தகராறு செய்தபடியே இருந்தார்.. அதாவது ஜீன் பிரச்சினை காரணமாகத்தான் மகனுக்கு பேச்சு வரவில்லை, இதற்கு சாய் லட்சுமி தான் பொறுப்பு என்று அவரை நேரடியாக குற்றஞ்சாட்டி, கடுமையான டார்ச்சரையும் தந்து வந்தார்.
ஸ்பீச் தெரஃபி
கணவனின் துன்புறுத்தலுக்கு நடுவில், மகனுக்கு பேச்சு சரியாக வரவேண்டும் என்று பேச்சு பயிற்சி அதாவது ஸ்பீச் தெரபிக்காக ஏராளமான மருத்துவமனைகளுக்கு மகனை தூக்கிக் கொண்டு ஓடினார்.. ஆனாலும், மகனுக்கும் சரியான பேச்சு வரவில்லை, கணவரின் டார்ச்சரும் குறையவில்லை.
இதனால் நாளுக்கு நாள் மன உளைச்சலுக்கு ஆளான சாய் லட்சுமி, தன்னுடைய அம்மாவிடம் இதை பற்றி சொல்லி அழுதுள்ளார்.. இதையடுத்து, சாய் லட்சுமி அம்மாவும், தன்னுடைய மருமகனுக்கு பலமுறை அறிவுரையையும், ஆறுதலையும் சொல்லி வந்தார்.
எனினும் சாய் லட்சுமியிடம் பேசுவதை ஒருகட்டத்தில் நிறுத்திவிட்டார் அனில்குமார்.. இதனால் மாதக்கணக்கில் தம்பதி இருவரும் பேச்சுவார்த்தை இல்லாமலேயே இருந்து வந்துள்ளனர்..
அப்பார்ட்மெண்ட் 4வது மாடி
இதனால் சாய் லட்சுமி நாளுக்கு நாள் விரக்தி மனப்பான்மைக்கு ஆளானார். இப்படிப்பட்ட சூழலில்தான், அனில் குமார் விசாகப்பட்டினத்தில் உள்ள தன்னுடைய சகோதரர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
கணவருடன் ஓயாத பிரச்சினை இருந்து வந்ததால், அவர் இல்லாத நேரத்தில் தன்னுடைய பிள்ளைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொள்வதென சாய் லட்சுமி முடிவு செய்தார்.
இதற்காக குழந்தைகள் நன்றாக தூங்கி கொண்டிருந்தபோது, அவர்களின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி மூச்சு திணற வைத்து கொன்றார்.. பிறகு, தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து குதித்து தன்னுடைய உயிரையும் மாய்த்துக்கொண்டார்.
வீடியோ பேச்சு
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலங்களை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. மேலும், சாய் லட்சுமியின் வீட்டையும் ஆய்வு செய்தனர். அப்போது தற்கொலைக்கு முன்பாக பெற்றோருக்கு செல்போனில் ஒரு வீடியோ செய்தியை ரெக்கார்ட் செய்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
அந்த வீடியோவில், "அவர் திருந்த மாட்டார். நான் மிகவும் வேதனையில் இருக்கிறேன்.. இப்போது இந்த தவறையும் செய்து கொண்டிருக்கிறேன். நானே இல்லாதபோது, என் குழந்தைகள் உயிரோடு இருப்பது அவசியமில்லை.. என்னை மன்னித்து விடுங்கள்" என்று கண்ணீருடன் வீடியோவில் பேசியிருந்தார் சாய் லட்சுமி..
இதுகுறித்து சாய் லட்சுமியின் அப்பா மாறைய்ய பாபு கொடுத்த புகார் மீது, அவரது கணவர் மற்றும் மாமியார், மாமனார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்,
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications