சீனாக்காரன் AI-ல் கொடிகட்டி பறக்கிறான்.. இந்தியா கோமியத்தில் ஆய்வு செய்கிறது.. மனோ தங்கராஜ் கிண்டல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்காவும், சீனாவும் அறிவு வளர்ச்சியில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தியா பாஜக ஆட்சியில் கோமியத்திற்கும், கும்பமேளாவிற்கும் வாட்சப் யூனிவர்சிட்டியில் விளக்கம் தேடிக் கொண்டிருப்பதாக திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே ஆர்டிஃபிஷியல் இண்டலிஜன்ஸ் பயன்பாடுகள் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் புதிய புதிய மென்பொருள்களையும், செயலிகளையும் உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான சாட் ஜிபிடி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

mano thangaraj bjp

இதனைத் தொடர்ந்து கூகுள் நிறுவனம் தரப்பில் ஜெமினி, சாம்சங் ஏஐ, மெட்டாவின் லாமா என்று பல்வேரு ஏஐ தொழில்நுட்பங்கள் வெளியிடப்பட்டு வந்தது. இதற்காக அந்தந்த நிறுவனங்கள் மிகப்பெரிய பொருட்செலவு செய்து அடுத்தக் கட்ட ஆய்விலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அண்மையில் சீனாவைச் சேர்ந்த டீப்சீக் ஏஐ வெளியாகி உலகையே புரட்டி போட்டுள்ளது.

இதுவரை வெளியான ஏஐ தொழில்நுட்பத்திலேயே சிறந்த ஒன்றாக டீப்சீக் உருவாகியுள்ளது. பயனர்களின் கேள்விகளுக்கு கூடுமான வரை துல்லியமாக பதில் அளித்தது. இதனால் சீனாவின் டீப்சீக் செயலி கடந்த சில வாரங்களில் அதிக மக்களால் டவுன்லோட் செய்யப்பட்ட செயலியாக உருவாகி உள்ளது. இதன் பயன்படுத்தி தங்களது பணிகளை பல்வேறு தரப்பினரும் எளிமையாக செய்து வருகின்றனர்.

சீனாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு, ஏற்றுமதியில் மட்டுமல்லாமல் தொழில்நுட்பத்திலும் உச்சக் கட்டமாக மோதி வருவது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனால் இந்தியாவும் தொழில்நுட்ப ரீதியாக அடுத்த கட்டத்தை எட்ட வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இதனிடையே மாட்டுப் பொங்கலன்று கோமியத்தில் கிருமி நாசினிகள் உள்ளிட்ட பல நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட மருத்துவ குணம் நிறைந்துள்ளது என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடிபேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

mano thangaraj bjp

இந்த இரு சம்பவங்களையும் ஒப்பிட்டு முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், அமெரிக்கா ChatGPT, Copilot, MetaAI, Grok, Gemini என்றும் வெளியிட்டிருக்கிறது. அதேபோல் சீனா Deepseek என்று அறிவு வளர்ச்சியில் கொடிகட்டி பறக்கும் நிலையில், இந்தியா மோடி ஆட்சியில் கோமியத்திற்கும், கும்பமேளாவிற்கும் வாட்சப் யூனிவர்சிட்டியில் விளக்கம் தேடிக் கொண்டிருக்கிறது என்று விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+