Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீனாவை மிரள விட்ட ஸ்ரீபெரும்பத்தூர்.. ஒரே நாளில் வந்த சூப்பர் அறிவிப்பு.. அடித்து தூக்கும் தமிழ்நாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை; சீனாவை மிரள வைக்கும் விதமாக காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்பத்தூருக்கு முக்கியமான முதலீடு ஒன்று வந்துள்ளது. சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்கள் சென்னையில் தனது கிளையை தொடங்க ஆலோசனை செய்து வருகிறது.

சென்னை தற்போது உலக அளவில் டெலிகாம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களால் குறி வைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தற்போது முதலீடுகளை அதிகப்படுத்தி உள்ள பாக்ஸ்கான் நிறுவனம், மொத்தமாக தமிழகத்தில் உற்பத்தியை செய்து வருகிறது. இந்த நிறுவனம்தான் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பி வருகிறது. சீனாவில் பாதி, சென்னையில் பாதி என்று செய்யப்பட்டு வந்த உற்பத்தியை நிறுத்திவிட்டு மொத்தமாக சென்னையில் உற்பத்தியை செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்து உற்பத்தி செய்து வருகிறது.

China based Kone India to start manufacturing escalators at Sriperumbudur unit in Tamil Nadu.

காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்பத்தூர்: இந்த முதலீடுகள் எல்லாம் பெரும்பாலும் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீபெரும்பத்தூரில்தான் செய்யப்படுகின்றன. அதேபோல் ஆப்பிள் முதலீடுகள் மட்டுமின்றி மற்ற ஏற்றுமதி சார்ந்த முதலீடுகள் பல ஸ்ரீபெரும்பத்தூரில்தான் செய்யப்படுகின்றன. இந்த தொடர் முதலீடுகள்தான் தற்போது காஞ்சிபுரம் இந்த லிஸ்டில் இடம் பிடிக்க முக்கிய காரணமாகி உள்ளது.

இது போக ஆப்பிள் ஐபோன் மற்றும் பிற ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் 'Gorilla Glass' எனப்படும் திரை கண்ணாடி தயாரிப்பு நிறுவனமான Corning Inc., தனது உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் அமைக்க ₹1,000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப்பாக்கத்தில், 25 ஏக்கர் நிலப்பரப்பில், சுமார் 300 பேர் பணியாற்றும் வகையில் உற்பத்தி ஆலை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

எங்கே அமையும்: ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கத்தில், 25 ஏக்கர் நிலப்பரப்பில், தேவை ஏற்பட்டால் விரிவுபடுத்தப்பட்டு, சுமார் 300 பேர் பணிபுரியும் வசதி ஏற்படுத்தப்படும். இந்த தொழிற்சாலைக்காக Corning தனது இந்திய ஒப்பந்த நிறுவனமான Optiemus Infracom உடன் இணைந்து செயல்படும்.

உயரும் ஏற்றுமதி: இந்தியாவில் மின்னணு சாதனங்கள் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது. மின்னணு சாதன ஏற்றுமதியில் உபி,மகராஷ்டிரா,கர்நாடகா மாநிலங்களின் சாதனைகளை வென்று முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது தமிழ்நாடு.

1.86 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதியை இரண்டு ஆண்டுகளில் 5.87 பில்லியன் டாலருக்கு உயர்த்தி அபார சாதனை செய்துள்ளது தமிழ்நாடு.

தற்போது முதலீடு: சீனாவை மிரள வைக்கும் விதமாக காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்பத்தூருக்கு முக்கியமான முதலீடு ஒன்று வந்துள்ளது. அதன்படி பிரபல கோன் நிறுவனம் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூர் யூனிட்டில் எஸ்கலேட்டர்கள் உற்பத்தியைத் தொடங்கவுள்ளது.

முன்னதாக, கோன் சீனா, பின்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து எஸ்கலேட்டர்களை இறக்குமதி செய்து பின்னர் இந்தியாவில் அசெம்பிள் செய்து வந்தது. இத்தனை காலம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் இனி ஸ்ரீபெரும்பத்தூரிலேயே இது உற்பத்தி செய்யப்படும்.

காஞ்சிபுரம்: ஏற்கனவே ஐபோன் ஏற்றுமதியை அதிகரிப்பதன் காரணமாக காஞ்சிபுரத்தின் மொத்த ஏற்றுமதி அதிகரித்து உள்ளது.; ஜாம்நகருக்குப் பிறகு (H1 FY 2023) மதிப்பின் அடிப்படையில் காஞ்சிபுரம் இப்போது இந்தியாவின் 2வது பெரிய ஏற்றுமதி மாவட்டமாக உள்ளது. இது 2021 இல் 7 வது இடத்தைப் பிடித்தது. தற்போது வேகமாக முன்னேறி இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது.

சூரத், மும்பை, புனே, மும்பை புறநகர், பெங்களூர், ஹைதராபாத் போன்றவற்றை முந்தி காஞ்சிபுரம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

ஐபோன் 17 உற்பத்தி: சென்னையில் ஐபோன் 16 உற்பத்தி ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில்தான்

சென்னையில் ஐபோன் உற்பத்தியாளர்கள் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் iPhone 17 ஐ உருவாக்கத் தொடங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல் முறையாக புதிய ஐபோன் தயாரிப்பு சீனாவிற்கு வெளியே தொடங்கும் என்று ஆப்பிள் ஆய்வாளர் மிங் சி குவோ கூறியுள்ளார். சீனாவில் உற்பத்தி தொடங்கும் முன்பாக சென்னையில் இந்த முறை ஐபோன் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

இதன் மூலம் சர்வதேச ஐபோன் மார்க்கெட்டில் சீனாவை சென்னை முந்தி உள்ளது. சென்னையில் தற்போது சர்வதேச நிறுவனங்கள் முதலீடுகளை அதிகப்படுத்தி வருகிறது. அதிலும் சீனாவில் இருக்கும் நிறுவனங்கள் வேகமாக தமிழகத்தில் முதலீடுகளை பெருக்கி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+