மாதவிடாய் வலியால் விடுப்பு எடுத்த மாணவியை கதற வைத்த பிஎஸ் சீனியர் பள்ளி ஆசிரியர்.. சின்மயி ட்வீட்
சென்னை: மாதவிடாயால் ஏற்பட்ட வயிறு வலி காரணமாக ஒரு நாள் பள்ளிக்கு விடுப்பு எடுத்த மாணவியை ஆசிரியர் ஒருவர் ஏன் பள்ளிக்கு வரவில்லை என கேட்டு அவர் வாயாலேயே காரணத்தை திரும்ப திரும்ப சொல்ல வைத்த கொடூரம் நடந்ததாக பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கூறியுள்ளதை சின்மயி அம்பலப்படுத்தியுள்ளார்.
#MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் சினிமா துறையில் பாலியல் புகார்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிர்ச்சியை ஏற்படுத்தின. பல பாலியல் புகார்களை பாடகி சின்மயி அம்பலப்படுத்தி வந்தார்.
அந்த வகையில் தற்போது பள்ளிகளில் நடைபெறும் பாலியல் புகார்களையும் அவர் அம்பலப்படுத்தி வருகிறார். சென்னை கே கே நகர் பத்மசேஷாத்ரி பால பவன் பள்ளியில் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலனால் 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்ததை அம்பலப்படுத்தினார்.

மகரிஷி வித்யா மந்திர்
இதையடுத்து சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, கேளம்பாக்கம் சுஷில் ஹரி சர்வதேச பள்ளி என வரிசையாக பாலியர் புகார்கள் வந்துள்ளன. இந்த நிலையில் தற்போது பி எஸ் சீனியர் செகண்டரி பள்ளி மீது பாலியல் சீண்டல்களை சின்மயி ஆதாரத்தோடு வெளிப்படுத்தியுள்ளார்.

8 பேர்
இதுகுறித்து சின்மயி தனது ட்விட்டரில் பதிவிடுகையில் பிஎஸ் சீனியர் செகண்டரி பள்ளியைச் சேர்ந்த 8 ஆசிரியர்கள் மீது முன்னாள் மாணவிகள் பாலியல் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த 8 பேரில் ஒருவர் பெண் குழந்தைகளை தவறாக படமெடுத்துள்ளார். அந்த 8 பேர் ஞானசேகரன், குருமூர்த்தி, பத்மநாபன், கலைமணி, பிரபாகரன், சிவக்குமார், வெங்கட்ராமன், ரவிச்சந்திரன், சாய்பிரசாத் ஆகியோர் பாலியல் தொந்தரவு கொடுத்து தவறாக படமெடுத்ததாக கூறியுள்ளனர்.

விடாத ஆசிரியர்
அதிலும் ஒரு மாணவி கூறுகையில் மாதவிடாய் காரணமாக அதிக வயிற்று வலியால் ஒரு நாள் பள்ளிக்கு விடுப்பு எடுத்துவிட்டேன். மறுநாள் சென்ற போது ஆசிரியர் ஒருவர் ஏன் வரவில்லை என கேட்டார், நான் உடம்பு சரியில்லை என்றேன். ஆனால் கேள்வி மேல் கேள்வி நான் மாதவிடாய் விஷயத்தை சொல்லும் வரை விடவே இல்லை.

விடுமுறை
பின்னர் அந்த விஷயத்தை சொன்னவுடன், திரும்ப திரும்ப என்னிடம் காரணம் கேட்டு ரசித்தார். இந்த வலி வாழ்க்கை முழுவதும் இருக்கும். அதற்காக விடுமுறை எடுப்பியா என கேள்வி கேட்டார் என அந்த மாணவி கண்ணீர் மல்க கூறியதையும் சின்மயி வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications