ஜி ஜின்பிங் வருகை.. மகாபலிபுரத்தில் குவிந்த சீன பாதுகாப்பு அதிகாரிகள்.. அதிகாலையிலிருந்து ஆய்வு!
சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை அடுத்து மகாபலிபுரத்தில் சீன அரசின் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.
சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை அடுத்து மகாபலிபுரத்தில் சீன அரசின் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.
தமிழகம் தற்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகைக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. வரும் 11ம் தேதி ஜி ஜின்பிங் தமிழகம் வருகிறார்.
அவர் பிரதமர் மோடியை காஞ்சிபுரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.

எவ்வளவு ஆள்
11ம் தேதி முதல் 13ம் தேதி வரை இந்த ஆலோசனை நடக்க உள்ளது. பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள், பொருளாதாரம் சார்ந்த அறிவிப்புகள் இந்த ஆலோசனையில் அறிவிக்கப்பட உள்ளது. அதேபோல் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள், அறிவிப்புகளும் இதில் கையெழுத்தாகலாம் என்று குறிப்பிடுகிறார்கள்.

தமிழக அரசு
இந்த நிலையில் ஜி ஜின்பிங் வருகைக்காக தமிழக அரசு மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளிக்க உள்ளது. மகாபலிபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள், சிற்பங்கள் ஆகியவற்றை ஜி ஜின்பிங் பார்வையிடுவார். இதற்காக தமிழக அரசு தீவிரமாக ஏற்பாடுகளை செய்து வருகிறது.

பாதுகாப்பு
இந்த நிலையில் இன்றில் இருந்து மகாபலிபுரத்தில் முக்கிய சில இடங்களுக்கு செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீன அதிபர் பார்வையிட உள்ள இடங்களுக்கு செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு சோதனைகள் நடந்து வருகிறது. தற்போது இந்திய ராணுவ வீரர்கள், சிஆர்பிஎப் வீரர்கள், போலீஸ் அதிகாரிகள் அங்கு பாதுகாப்பு பணியில் நிற்கவைக்கப்பட்டுள்ளனர்.

சீனா பாதுகாப்பு
அதேபோல் சீனாவை சேர்ந்த 10 அதிகாரிகள் தற்போது அங்கு முதற்கட்டமாக பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறார்கள். இன்று சீனாவில் இருந்து கூடுதலாக பாதுகாப்பு அதிகாரிகள் மகாபலிபுரத்தில் சோதனை செய்ய உள்ளனர். முதல்முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications