மன்சூர் அலிகானை போல் ஐஸ்வர்யா ராயை ஆபாசமாக பேசிய ராதாரவி.. ஆக்ஷன் எடுக்காதது ஏன்.. சின்மயி கேள்வி
சென்னை: எனக்கு மட்டும் ஹிந்தி தெரிந்திருந்தால் நான் பாலிவுட்டில் நடித்திருப்பேன் என்றும் ஐஸ்வர்யா ராயை பலாத்காரம் செய்திருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கும் என்றும் ராதாரவி சொன்னதற்கு ஏன் யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை என பாடகியும் சமூக ஆர்வலருமான சின்மயி வீடியோ ஆதாரத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
லியோ படத்தில் நடிகர் விஜய், அர்ஜுன், சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பொதுவாக மன்சூர் அலிகான் ஆரம்ப கட்டத்திலிருந்தே வில்லன் ரோல்களில் நடித்து வருகிறார்.

அவருக்கு பெரும்பாலும் பெண்களை பலாத்காரம் செய்வது, கொலை குற்றம் புரிவது, கஞ்சா உள்ளிட்டவற்றை கடத்துதல், சட்டவிரோத விஷயங்களை செய்து அவரை ஹீரோ கண்டுபிடிப்பது போன்ற ரோல்கள் அமையும்.
இந்த நிலையில் லியோ படத்தில் நடித்த மன்சூர் அலிகான் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது நடிகை த்ரிஷா இந்த படத்தில் நடித்தார் என எனக்கு தெரிந்தவுடன் அவரை பலாத்காரம் செய்யும் காட்சிகள் இருக்கும் என நினைத்தேன். ஆனால் இல்லாமல் போய்விட்டது. இருந்திருந்தால் குஷ்பு உள்ளிட்டோருடன் அந்த காட்சிகளில் நடித்தது போல் நடித்திருப்பேன் என தெரிவித்தார்.
இந்த பேச்சுக்கு பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். பெண்கள் என்ன பலாத்காரம் செய்யும் பொருளா என்ற கேள்வி எழுந்துள்ளது. காமெடி என்ற பெயரில் இப்படி வன்மத்தை கக்குவதா என்றும் விமர்சனங்கள் வந்தன. நடிகை த்ரிஷாவும் இது போல் மனிதத்தன்மை இல்லாத ஒருவருடன் இனி நான் எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என கூறி கண்டித்திருந்தார்.
நடிகை த்ரிஷாவுக்கு நடிகைகள் குஷ்பு, மாளவிகா மோகன், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி, இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.
அதன்பேரில் அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் த்ரிஷா விவகாரத்தில் இத்தனை பேர் கண்டிக்கும் நிலையில் ராதாரவி இதை விட மோசமாக ஒரு நிகழ்ச்சியில் பேசியதாக பழைய வீடியோவை எடுத்து போட்டிருக்கிறார் பாடகி சின்மயி.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ராதாரவி தமிழ் சினிமா யூனியன்களில் முக்கிய பதவிகளில் இருந்து வருகிறார். இவரும் மன்சூர் அலிகான் சொன்னது போல்தான் சொல்லியுள்ளார். ஆனால் அவர் ஏதோ ஒரு பெரிய ஜோக் அடித்துவிட்டது போல் எல்லாரும் சிரிக்கிறார்கள். இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏன் யாரும் நினைக்கவில்லை என்பது குறித்து அறிய விரும்புகிறேன் என சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையடுத்து ராதாரவி பேசிய வீடியோவும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தமிழ் தமிழ் தமிழ்னு சொல்றாங்க, நான் ஹிந்தி கத்துகிட்டிருந்தால் ஐஸ்வர்யா ராயை கெடுத்திருப்பேன்ல. நமக்கு அந்த வேஷம்தானே கொடுப்பாங்க, கடவுள் வேஷமா கொடுப்பாங்க என பேசியுள்ளார். இவர் திமுகவில் இருந்த போது நயன்தாராவையும் கடுமையான வார்த்தைகளால் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications