சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் வெளியானது! தலைவராக பரத் தேர்வு
சென்னை: சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் இன்று நடைபெற்றது. பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி தலைவராக பரத் தேர்வாகியுள்ளார்.
தேர்தலில் தினேஷ், பரத், சிவன் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் 3 அணிகள் களமிறங்கின. இதில் 491 வாக்குகள் பெற்று பரத் தலைவராக தேர்வாகியுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சின்னத்திரை நடிகர் சங்கம் என்பது சுமார் 2000 உறுப்பினர்களை கொண்ட அமைப்பாகும். இதன் தலைவராக சிவன் சீனிவாசன், செயலாளராக போஸ் வெங்கட் ஆகியோர் இருந்து வந்த நிலையில் அவர்களது பதவிக்காலம் முடிவுற்றது. இதனையடுத்து தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளோடு இரண்டு துணை தலைவர்கள், 4 இணை செயலாளர்கள் பதவிக்கும், 14 கமிட்டி உறுப்பினர்கள் பொறுப்புக்கும் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.
இதனையடுத்து இன்று காலை சென்னை விருகம்பாக்கத்தில் தேர்தல் தொடங்கியது. தேர்தல் அதிகாரியாக பெப்சி அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் உமா சங்கர் பாபு தேர்தலை நடத்தினார். இதில் பதிவான வாக்குகள் மாலை எண்ணப்பட்டு இரவு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி தலைவராக 491 வாக்குள் பெற்று பரத் தேர்வாகியுள்ளார்.
-
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை












Click it and Unblock the Notifications