அன்று அப்படி சொன்ன மம்தா தீதீ இன்று என்ன அறிவிச்சாங்க? ஸ்டாலின் சொன்னால் நடந்துடுமா? சிராக் பாஸ்வான்
பாஜகவை எதிர்க்க ஓரணியில் திரளுவோம் என எதிர்க்கட்சிகள் சொல்கிறார்கள், ஆனால் அவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லையே- சிராக் பாஸ்வான் கேள்வி
சென்னை: பாஜகவை எதிர்ப்பதற்காக ஓரணியில் திரள்வோம் என பல ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் அந்த ஓரணி என்பது நடைமுறையில் வந்தால் மட்டுமே சாத்தியம் என லோக்ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுகிறார்கள் என பீகார் மாநில பாஜக பொய்யான வீடியோவை வெளியிட்டு தமிழகம் மீது களங்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது. இது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் வடமாநிலத்தவர்களின் உண்மை நிலையை அறிய பீகாரின் லோக்ஜன சக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் சென்னை வந்திருந்தார். அவரிடம் தமிழ் ஒன் இந்தியா அரசியல் சார்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களை பார்ப்போம்.

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள்
கேள்வி: கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் தமிழகத்தில் வடமாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற விஷயத்தை பீகார் பாஜக பரப்பி வருகிறது. ஓரணியில் எதிர்க்கட்சிகள் திரள்வதை தடுக்கவும் திமுக மீது களங்கம் விளைவிக்கவும் வடமாநிலத்தவர்கள் குறித்த பிரச்சினை எழுப்பப்படுகிறது என நீங்கள் கருதுகிறீர்களா?
பதில்: நான் அப்படி நினைக்கவில்லை. எல்லாவற்றையும் அரசியல் கோணத்தில் பார்ப்பது சரி அல்ல. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது நடக்குமா இல்லையா என எனக்கு தெரியவில்லை. இது போல் ஒவ்வொரு ஆண்டும் நாம் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைவது, கை கோர்ப்பது, ஆனால் இவையெல்லாம் போட்டோ எடுப்பதுடன் நின்று விடுகிறது. ஒரே மேடையில் எத்தனை பிரதமர் வேட்பாளர்கள் இருந்தார்கள் என்பதை நாம் பார்த்தோம்.

மேற்கு வங்க முதல்வர்
ஓரணியில் திரள்வோம் என முன்பு கூறியிருந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தற்போது வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டி என அறிவித்தார். எனவே எதிர்க்கட்சிகள் எங்கே ஒற்றுமையாக இருக்கிறார்கள்? ஓரணி என்பதே இல்லாத நிலையில் அந்த அணியை பிளவுப்படுத்த வட இந்தியர்களுக்கும் தென் இந்தியர்களுக்கும் பிரிவினையை ஏற்படுத்த பீகார் மக்களையும் தமிழக மக்களையும் பகடைக்காயாக பயன்படுத்துகிறார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா? நான் அப்படி நினைக்கவில்லை. அதற்கான ஆதாரம் அவர்களிடம் இருந்தால் கட்டாயம் பிளவுப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நட்புறவு
கேள்வி: முன்னாள் முதல்வர் கருணாநிதி, உங்கள் தந்தை ராம் விலாஸ் பாஸ்வான், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரிடையே பல ஆண்டுகளாக நல்ல நட்புறவு இருந்தது. அதையே முதல்வர் ஸ்டாலினும் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் நல்ல நட்புறவில் இருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்ற பிரச்சாரம் இந்த நட்புறவை பாதித்துவிடும் என நீங்கள் நினைக்கிறீர்களா.

நட்புறவை கெடுப்பது நல்லதல்ல
பதில்: நீங்கள் சொல்லும் பிரச்சாரம் குறித்து எனக்கு தெரியாது. நான் திரும்ப திரும்ப சொல்வது ஒன்றுதான், எல்லாவற்றையும் அரசியல் கோணத்தில் பார்ப்பது நல்லதல்ல. இரு மாநிலத்தின் நட்புறவை கெடுக்க யாராவது செயல்படுகிறார்கள் என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும். அது தனிப்பட்ட முறையில் இருக்க வேண்டும். ஒரு ஜாதியில் ஏதாவது தவறு நடந்தால் ஒட்டுமொத்தமாக அந்த ஜாதியையே குறை சொல்வது, ஒரு மாநிலத்தில் யாராவது பிரச்சினை செய்துவிட்டால் அந்த மாநிலத்தையே குறை சொல்வது தவறு. எல்லா இடங்களிலும் சமூகவிரோதிகள் உள்ளார்கள். அதற்காக ஒரு மாநிலத்தையோ ஒரு இனத்தையோ குறி வைப்பது மிகவும் தவறானது. இது போன்ற பிரச்சினையை கிளப்பும் சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுத்தால் நாட்டில் அமைதி நிலவும். என் அப்பா தமிழக மக்கள் மீது நிறைய அன்பை வைத்திருந்தார். எனவே பீகார்- தமிழகம் இடையே உள்ள அழகான நட்புறவு தொடர வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்த நட்புறவை கெடுக்க யாராவது பொய் பிரச்சாரம் செய்தால் அவர்களை சிறையில் அடைக்க வேண்டும்.

பிரதமரிடம் விளக்குவேன்
கேள்வி: பீகார் மாநில பாஜகதான் தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் பிரச்சினை குறித்து போலி வீடியோவை தயார் செய்து பிரச்சாரம் செய்தது. இதுகுறித்து நீங்கள் பிரதமரை சந்தித்து பேசுவீர்களா
பதில்: நிச்சயமாக நான் இந்த விவகாரத்தை பிரதமர் நரேந்திர மோடியிடமும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் கொண்டு செல்வேன். அவர்களுக்கு வடமாநிலத்தவர் பிரச்சினை குறித்த உண்மை தெரிய வேண்டும் என விரும்புகிறேன். இது போன்ற பொய் பிரச்சாரத்தை யார் செய்கிறார்கள் என்பதை அவர்கள் கண்டுபிடிப்பார்கள்.

நோ கமென்ட்ஸ்
கேள்வி: தேசிய அரசியலுக்கு ஸ்டாலின் வர வேண்டும் என ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு தகுதியானவர் என நீங்கள் கருதுகிறார்களா?
பதில்: இந்த கேள்விக்கு நான் பதில் சொல்ல மாட்டேன். தேசிய அரசியலுக்கு வருவதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது. எல்லாரும் அவரவர் திறனை நிரூபிப்பர். மாநிலத்தை ஆள வேண்டுமானாலும் சரி நாட்டை ஆள வேண்டுமானாலும் சரி யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் அந்த விஷயத்தில் மக்கள்தான் இறுதி முடிவு எடுப்பார்கள். இவ்வாறு சிராக் பாஸ்வான் தெரிவித்தார்.
-
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்! -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
5 தொகுதிகளுக்கு சரி.. ஆனால் சென்னையில் 2 தொகுதிகள் கொடுங்க.. திமுகவுக்கு சிபிஎம் விதித்த நிபந்தனை! -
விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்? வெளிப்படையாக சொன்ன திருமாவளவன்! ராமதாஸுக்கு வாழ்த்துகளாம்! -
ராமதாஸ் உடன் கூட்டணியை உறுதி செய்தார் சசிகலா! தமிழக நலனுக்காக இணைந்திருப்பதாக அறிவிப்பு -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
சுருண்டு விழுந்த சூரியன்! 91இல் வீசிய ‘ராஜீவ்’ அலை.. 2 வருடத்தில் ’நேஷனல் லீடர்’ ஆன ஜெயலலிதா -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
டிபன்டர் காருடன் போஸ் கொடுத்த.. பிரேமலதா! திமுகவுக்கு தேவையில்லாத ஆணி.. நெட்டிசன்கள் கொந்தளிப்பு











Click it and Unblock the Notifications