அடிச்சே கொன்னிருக்காங்க!.. விட மாட்டேன்.. ராம்குமார் வழக்கு போல் ஆகும்.. சீறும் சித்ராவின் தோழி
சென்னை: சித்ராவை ஹேமந்த் அடித்தே கொன்றிருக்கிறார். இதற்கு நியாயம் கேட்காமல் விட மாட்டேன். இந்த வழக்கும் ராம்குமார் வழக்கு போல் மாறிவிடும் என சித்ராவின் தோழி ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகை ரேகா நாயர் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் அண்மையில் வெளியான ஆடியோவில் இருந்து நிறைய பொய்கள் இருப்பது தெரிகிறது. இருவருக்கும் இடையே நடக்கும் சண்டையை ஏன் மறைக்குமாறு ஹேமந்த் கூற வேண்டும்?
ஆரம்பத்தில் நான் சித்ராவை பற்றி பேசும் போது என் குடும்பத்தினர் என்னை நிறுத்திக் கொள்ளுமாறு கூறினர். சித்ராவின் மரணம் தற்கொலை கிடையாது. ஹேமந்த்தான் குற்றவாளி என்பது நன்றாக தெரிகிறது. அவர்தான் சித்ராவை அடித்தே கொன்றுள்ளார்.

ஹேமந்த்
என்னை இதுவரை யாரும் மிரட்டவில்லை. ஒரு வேளை ஹேமந்த் வெளியே வந்தால் என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். சித்ராவுக்காகவும் நியாயத்துக்காகவும் என் உயிர் போனால் பரவாயில்லை. ஹேமந்த் பலருக்கு பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது.

நண்பர்கள்
அவர் பலரை ஏமாற்றியுள்ளார். சித்ராவை அடித்தே கொன்றதுக்கு நான் நியாயம் கேட்காமல் விட மாட்டேன். ஹேமந்திற்கு ஆதரவாக யார் வந்தாலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். சித்ரா, ஹேமந்த் ஆகியோரின் பெற்றோர்களுக்கு தெரியாத ஏராளமான விஷயங்கள் அவர்களை சுற்றியுள்ள நண்பர்களுக்குத் தெரியும்.

ராம்குமார் வழக்கு
சித்ரா வழக்கு ராம்குமார் வழக்கு போல்தான் முடியும். பாவம், புண்ணியத்தின் மீது எனக்கு நம்பிக்கை நிறைய இருக்கிறது. நிச்சயம் ஹேமந்த் குறைந்த நாட்களே உயிரோடு இருப்பார். ஹேமந்த் மாதிரி அயோக்கியன்களை நம்பி பெண்கள் ஏமாற கூடாது.

நீதிமன்றத்தில் சாட்சி
சித்ராவின் வழக்கை எப்படியாவது முடித்துவிடுங்கள் என அரசிடம் கேட்கிறேன். நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல அழைத்தாலும் நான் வர தயாராக இருக்கிறேன் என்றார். ஹேமந்தின் நண்பர் ஒரு ஆடியோ வெளியிட்ட நிலையில் இந்த வழக்கின் திசை எப்படி செல்லும் என்பது தெரியவில்லை.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications