யார்னு தெரியுதா.. கருப்பு சுடிதாரில்.. மடியில் படுத்து கொண்டு.. வைரலாகும் முல்லைப்பூ சிரிப்பு போட்டோ
சித்ராவின் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது
சென்னை: கருப்பு கலர் சுடிதாரில், தன் அம்மா மடியில் ஒரு குழந்தை போல படுத்து கொண்டு சிரிக்கிறார் இந்த முல்லை பெண்!
சினிமா பிரபலம் அளவுக்கு டிவி நடிகர்களில் அதிக பிரபலமாகிய சித்ரா, மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர் மத்தியில் ஏற்படுத்திவிட்டு போய்விட்டார்.

இதற்கு காரணம் வெறும் நடிப்பு என்று மட்டும் சொல்லிவிட முடியாது.. காம்பியரிங், நடனம், மாடலிங் என மல்ட்டி திறமைகளை கொண்டவர் சித்ரா. உயராத உழைப்பின் மேல் உயரிய மதிப்பை கொண்டவர்.. அதில் தன்னை நிரூபித்தும் காட்டியவர்.. அதனாலேயே தினம் தினம் சித்ராவின் பெயர் மீடியாவில் தொடர்ந்து அடிபட்டு வருகிறது.
சித்ரா இறந்தது முதலே சித்ரா சம்பந்தப்பட்ட வீடியோவும், போட்டோக்கள், டிக்டாக்குகள் போன்றவை இணையத்தில் வைரலாகி வருகிறது.. இவைகளை சித்ராவின் ரசிகர்கள் தினந்தோறும் ஷேர் செய்து கொண்டே இருக்கிறார்கள்.
அதேபோல, சித்ராவின் கடைசி தருணங்கள், கடைசி டிக்டாக், கடைசி போட்டோ, கடைசி நிகழ்ச்சி, கடைசி காட்சி என அத்தனை கடைசிகளையும் மறக்காமல் பதிவு செய்து கொண்டே இருக்கிறார்கள்.. இந்நிலையில்தான், சித்ராவின் கடைசி நிகழ்ச்சியான ஸ்டார்ட் மியூசிக் புரோக்கிராம் விஜய்டிவியில் ஒளிபரப்பானது.. ரெட் கலர் டிரஸ்ஸில் தேவதையாக தெரிந்தார் சித்ரா.
இந்த நிகழ்ச்சி முடிந்த அடுத்த 1 மணி நேரத்தில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதை கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை.. நேற்று முழுவதும் சோஷியல் மீடியாவில் ரெட் கலரில் சித்ரா மின்னிக்கொண்டே இருந்தார்.. அதேபோல ஒரு போட்டோ வைரலாகிறது.. அது எப்போது எடுத்தது என்று தெரியவில்லை.
அவரது அம்மா மடியில் படுத்து கொண்டிருக்கிறார்.. அம்மா அவரை பாசத்துடன் பார்க்கிறார்.. கருப்பு கலர் சுடிதாரில் சிரித்த முகத்துடன் சித்ரா காணப்பட்டாலும், இப்போது சற்று மெருகேறி காணப்படுகிறார்.. முகம் தெளிவாக, இன்னும் அழகாக உள்ளது.. இந்த போட்டோவையும் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த சோகத்தில் ஷேர் செய்து வருகிறார்கள். நடிகை என்பதையும் தாண்டி, மிகப்பெரிய தன்னம்பிக்கை சுடராகவே தாக்கத்தை தந்துவிட்டு போயுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications