அமெரிக்கா வேண்டுமா? சீனா வேண்டுமா? முடிவு பண்ணிக்கோங்க.. நட்பு நாடுகளுக்கு டிரம்ப் தந்த நெருக்கடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்கா தனது நட்பு நாடுகளுக்கு கடுமையான நெருக்கடியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடுமையான எச்சரிக்கைகளை, கட்டுப்பாடுகளை உலக நாடுகளுக்கு அமெரிக்கா விதித்து உள்ளதாம்.

இது தொடர்பாக முதல் கட்டமாக ஐரோப்பிய நாடுகளுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் அமெரிக்க சார்பாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் முக்கியமான எச்சரிக்கையை விடுத்து உள்ளார்களாம்.

1. அமெரிக்கா வேண்டுமா? சீனா வேண்டுமா? யாருடன் உறவு வைக்கலாம் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

2. அமெரிக்காவின் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டுமா? சீனாவின் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

3. எந்த நாட்டில் இருந்து அதிக அளவில் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்பதையும் முடிவு செய்து கொள்ளுங்கள்.

Choose the one you want China or the USA USA President Donald Trump wanrs NATO Europe

4. அமெரிக்காவின் தயாரிப்பான ஸ்டார்லிங்கைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், சீனா உருவாக்க போகும் இதே இணையத்தின் மாடல் வரை காத்திருங்கள். வேண்டுமென்றால் அதையே கூட பயன்படுத்துங்கள். ஆனால் நீங்கள் மிகவும் கவலைப்படுவீர்கள்.

5. அமெரிக்காவின் பாதுகாப்பு உபகரணங்களை நீங்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறீர்கள். அதை தொடர்ந்து பயன்படுத்த வேண்டுமா? அல்லது சீனா உடன் நெருக்கமாக செல்ல வேண்டுமா? என்பதை பார்த்துக்கொள்ளுங்கள், என்று அமெரிக்கா தனது நட்பு நாடுகளுக்கு கடுமையான நெருக்கடியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சீனா - அமெரிக்கா இடையே வரிப்போரில் யார் வெற்றி பெறுவார்கள்?

சீனாவை விட அமெரிக்காதான் சீனாவை அதிகம் நம்பி இருக்கிறது. சீனா அமெரிக்காவை நம்பி இல்லை. அமெரிக்கா சீனாவின் பொருட்கள் இன்றி இயங்க முடியாது. சீனாவின் உற்பத்தி அந்த அளவிற்கு அதிகம் உள்ளது. இதனால் சீனாவின் பொருட்கள் இன்றி அமெரிக்கா கடுமையாக பாதிக்கும். அதோடு சீனா அமெரிக்காவை தவிர்த்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் வர்த்தக போரின் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.

அமெரிக்காவிலிருந்து சீனா எவ்வளவு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்கிறது?

2024 ஆம் ஆண்டில், அமெரிக்காவிற்கான சீனாவின் ஏற்றுமதிகள் $524.7 பில்லியனாக மதிப்பிடப்பட்டது, அதே சமயம் அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கான இறக்குமதியானது $163.6 பில்லியன் ஆகும். ​அதேபோல் 2024 ஆம் ஆண்டில், அமெரிக்கா $524.7 பில்லியன் மதிப்பிலான பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்து $163.6 பில்லியன் டாலர்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்தது. ​

சீனாவும் அமெரிக்காவும் மாறி மாறி எவ்வளவு வரி விதிக்கின்றன?

சீனா - அமெரிக்கா இடையே வர்த்தக போர் உச்சம் அடைந்து உள்ளது. சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து வரிகளை உயர்த்தி வருகிறார் . உலகம் முழுக்க உள்ள நாடுகள் மீது டிரம்ப் உயர்த்திய வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி உள்ளார்.

தற்போது நிலவரப்படி அமெரிக்கப் பொருட்கள் மீதான சீனாவின் 34% வரிக்குப் பதிலடியாக சீன ஏற்றுமதிகளுக்கு 104% வரியை அமெரிக்கா அறிவித்தது. ​ அமெரிக்கா உலகம் முழுக்க பல நாடுகளுக்கு 10% முதல் 50% வரையிலான வரிகளை விதிக்கிறது. சீனப் பொருட்களுக்கு 34% + 104% வரி விதிக்கப்படுகிறது. ஏப்ரல் 10, 2025 முதல் அமெரிக்கப் பொருட்களுக்கு 34% சீனா வரியை விதிக்கிறது. சீனா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாத காரணத்தால் சீனப் பொருட்களின் மீதான வரியை 104% ஆக உயர்த்தி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+