"நான் ரெடிதான்" பாடலுக்கு ரூ 35 லட்சம் மோசடி! தினேஷ் மாஸ்டருக்கு எதிராக டான்சர்கள் போராட்டம்
சென்னை: "லியோ" படத்தில் ஒரு பாடலுக்கு ஆயிரம் பேரை ஆட வைப்பதாக கூறி ரூ 35 லட்சத்தை முறைகேடு செய்ததாக நடன இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் தினேஷ் மாஸ்டர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடன இயக்குநர்களில் ஒருவர் தினேஷ் மாஸ்டர். இவர் 2011 ஆம் ஆண்டு "ஆடுகளம்" திரைப்படத்திற்காக சிறந்த நடன இயக்குநர் என்ற விருதை பெற்றார்.

இவர் "அயன்", "மாஸ்டர்" ஆகிய படங்களுக்காக சிறந்த நடன இயக்குநருக்கான பிலிம்பேர் விருதை வென்றார். அவ்வப்போது நடன இயக்குநராக பாடலிலும் தோன்றுவார்.
தினேஷ் மாஸ்டரை, நாகேந்திர பிரசாத்தான் அறிமுகப்படுத்தினார். இவர் பிரபுதேவா குழுவில் சேர்க்கப்பட்டிருந்தார். 1995 ஆம் ஆண்டு முதல் அவர் திரைத்துறையில் இருக்கிறார். "கொத்தவால் சாவடி லேடி" பாடலில் சிறப்பு தோற்றத்திலும் ஆடியிருந்தார்.
அது போல் "ஈசன்" படத்தில் "ஜில்லா விட்டு ஜில்லா வந்த" பாடலுக்கும் தினேஷ்தான் கொரியோகிராஃபர். இநத் நிலையில் "லியோ" திரைப்படத்திலும் நடன இயக்குநராக இவர் பணியாற்றியிருந்தார்.
இதில் வரும் "நான் ரெடிதான்" பாடலுக்கு ஆயிரம் பேரை நடனமாட வைப்பதாக கூறி ரூ 35 லட்சத்தை பெற்றதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவற்றை நடன இயக்குநர்களுக்கு கொடுக்காமல் ஏமாற்றியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கனடாவை சேர்ந்த ஒரு நடன கலைஞரை தினேஷ் தாக்கியதாவுகம் சொல்லப்படுகிறது. இதனால் நடன இயக்குநர்கள் சங்க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தினேஷ் மாஸ்டருக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
அதாவது தினேஷ் மாஸ்டர் தனது செல்வாக்கை பயன்படுத்தி, படத்தின் நடன இயக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக கையாண்டதாகவும் இதனால் மற்ற நடன இயக்குநர்களுக்கு உரிய பணம் கிடைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக ஆதாரங்கள் உள்ளதாகவும் இதனை வெளிப்படுத்துவதற்காகவும் சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். தினேஷ் மாஸ்டரை சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் லியோ படத்தில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் இதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications