பயணிகளே கவனிங்க.. கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறையையொட்டி சென்னையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
சென்னை: கிறிஸ்துமஸ், வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து டிசம்பர் 23, 24 அம் தேதிகளில் 780 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேட்டில் இருந்து 23, 24 ஆம் தேதிகளில் 91 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மாதவரத்தில் இருந்து 23, 24 ஆம் தேதிகளில் 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு எளிதாகச் செல்லும் வகையில், அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் மாத இறுதியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் காரணமாக பயணிகள் கூட்டம் அதிகரிக்கும். அரையாண்டு விடுமுறையும் வருவதால், பெரும்பாலானோர் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். அதற்கேற்ப இந்த ஆண்டும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

குறிப்பாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகள் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் மக்கள் அதிகம் இருப்பார்கள் என்பதால், அந்த வழித்தடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 23 ஆம் தேதி சென்னையிலிருந்து 225 சிறப்புப் பேருந்துகளையும் டிசம்பர் 24 ஆம் தேதி 525 சிறப்பு பேருந்துகளையும் இயக்க தமிழக போக்குவரத்துத் துறை திட்டமிட்டு உள்ளது.
வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுக்கு மேலாக இந்த கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதால், பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை தவிர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம், கே.கே.நகர், திருவான்மியூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து டிசம்பர் 23, 24 ஆம் தேதிகளில் திருச்சி, கும்பகோணம், சேலம், நெல்லை, மதுரைக்கு 780 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேட்டில் இருந்து 23, 24 ஆம் தேதிகளில் 91 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மாதவரத்தில் இருந்து 23, 24 ஆம் தேதிகளில் 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அரசு பேருந்துகளில் முன்பதிவு வசதி அதிக அளவில் செய்யப்பட்டுள்ளதால், பலர் ஆன்லைன் மூலமாகவே டிக்கெட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக குடும்பத்துடன் சொந்த ஊர் செல்லும் பயணிகள், அரசு பேருந்துகளை பாதுகாப்பான மற்றும் குறைந்த செலவிலான போக்குவரத்து முறையாக தேர்வு செய்கிறார்கள்.
கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து வெளி ஊர்களுக்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. சாதாரண நாட்களில் இருக்கும் கட்டணத்தை விட, பண்டிகை நாட்களில் மும்மடங்கு வரை டிக்கெட் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.
-
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன் -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டேன்ஸ் ஆடும் போது தகராறு.. கார் ஏற்றி இளம்பெண் கொலை! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications