Christmas Wishes in Tamil: உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் இதோ!!
Merry Christmas Wishes and Messages in Tamil: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இனிய பண்டிகை தான் கிறிஸ்துமஸ். இயேசு கிறிஸ்து அவதரித்த இந்த திருநாள், இருளில் இருந்து மனிதகுலத்தை மீட்டெடுத்து அன்பும் ஒளியும் பரப்பும் நாளாக கருதப்படுகிறது.உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்களால் மிகப் பெருமையுடன் கொண்டாடப்படும் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை, அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறது.
இந்த புனித நாளில் சர்ச்சில் வழிபாடு செய்வது, வீடுகளை அலங்கரிப்பது, ப்ளம் கேக் தயாரித்து பகிர்வது, இனிப்புகள் வழங்குவது, ஏழை மக்களுக்கு உதவி செய்வது என பல வழிகளில் கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியை பகிர்கிறோம். அந்த மகிழ்ச்சியை இன்னும் சிறப்பாக்க, உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர அழகான Christmas wishes, messages, status, stickers ஆகியவற்றை எவ்வாறு விதவிதமாக அனுப்பலாம் என்பதை இங்கே பார்க்கலாம் வாங்க.

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் - Christmas Wishes in Tamil:
1. கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்! உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியுடனும் நல்லெண்ணத்துடனும் பிரகாசிக்கட்டும்.
2. இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்! உங்கள் வாழ்க்கை சந்தோஷம், அன்பு மற்றும் அமைதியால் நிரம்பியதாக இருக்கட்டும்.
3. இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்! உங்கள் உறவுகள் என்றும் மகிழ்ச்சியுடன் வளமையாக இருக்கட்டும்.
4. கிறிஸ்து பிறந்த இந்த புனித நாளில் உங்களுக்கு மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!
5. கிறிஸ்துவின் போதனைகள் நம் வாழ்வில் ஒளியாகவும் வழிகாட்டியாகவும் இருக்கட்டும். இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!
6. கிறிஸ்துவின் பிறப்பு நமக்கு அன்பையும், மன்னிப்பையும், புதிய தொடக்கத்தையும் அளிக்கிறது. இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!
7. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை உங்களுக்கு அமைதி, அன்பு, மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் செல்வத்தை கொண்டு வரட்டும். இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!
8. மண்ணில் வந்த விண்ணின்
வேந்தனை போற்றிப் பாடி
ஆர்ப்பரித்து அகமகிழ்ந்து
கொண்டாடுவோம்
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

9. இதமான இன்பம் இதயம்
வருடி இருள் விலகும் நாள்
இனிமை பிறக்கும் நாள்
இந்த இயேசு பிறந்த நாள்
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

10. துன்பங்கள் கறைந்துவிட
துயரங்கள் தகர்த்துவிட
விடியலென வந்துவிட்டார்
விண்ணுலக தேவன் இயேசு கிறிஸ்து
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

11. இயேசுவின் ஒளி உங்கள் மனத்திற்குள் எப்போதும் ஒளிரட்டும். ஹேப்பி கிறிஸ்துமஸ்!

12. இயேசுவின் ஆசீர்வாதங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

13. ஒளி தந்த வெளிச்சத்திலேதுயர் கொண்ட இருள் நீங்கியவர் இயேசு... இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

14. கருணையின் சிகரமாய் கடவுளாய் பிறந்தவன்கடவுளின் ஒளி... கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

15. மண்ணிலே அன்பின் மகிமையை உணர்த்திடமெசியாவே பிறந்துவிட்டான்!... கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்துக்கள்

16. மனிதம் மலர... மானிடர் போற்ற... வாழ்ந்த இறைமகன் இயேசு பிரான் பிறந்த இந்த தினத்தில் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

17. மண்ணில் பிறந்த இறை பாலகன் உங்களை வெற்றியை நோக்கி வழி நடத்துவாராக... கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications