பிரபல நடிகர் சூரி திடீர்னு "அந்த" வீட்டுக்குள்ளே.. அதைவிடுங்க, ஆட்டோவுள்ளே யார்னு பாருங்க.. செம எளிமை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சூரியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதை பார்ப்பவர்கள் அனைவரும், சூரியா இது என்று வியப்புடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சூரி... இவர் சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்த 'விடுதலை' படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது...

வித்தியாசமான நடிப்பில் சூரியை பார்த்து, தமிழக மக்கள் ஆச்சரியப்பட்டு போனார்கள்.. இதை தொடர்ந்து "கொட்டு காளி" என்கிற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். அதே போல் 'விடுதலை' படத்தின் 2ம் பாகம் கூடிய விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதாகவும் தெரிகிறது.. இப்போது, பி.எஸ்.வினோத்ராஜ் டைரக்‌ஷனில் 'கொட்டுக்காளி' என்ற படத்திலும் சூரி நடித்து வருகிறார். இந்த படத்தின் வேலைகள் உச்சக்கட்டமாய் நடந்து கொண்டிருக்கிறது..

Cinema: Famous Actor soori went to visit fans house in madurai, video

எதிர்பார்ப்பு: விடுதலைக்கு பிறகு வெளியாகும் இந்த படத்தை பார்க்க, சூரியின் ரசிகர்கள் ஆர்வமாய் இருக்கிறார்கள். சூரியின் காமெடிக்கு இருந்த ரசிகர்களைவிட, இப்போது ஹீரோவாக உயர்ந்தபிறகு, இன்னும் ஏராளமான ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது...

இந்நிலையில், சூரி மதுரை வந்துள்ளார்.. அப்போது, மதுரையில் உள்ள தன்னுடைய ரசிகரின் அம்மா, உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை கேள்விப்பட்டு, அவரை நேரில் சந்திப்பதற்காக சென்றுள்ளார்.. இதற்காக ஆட்டோவிலேயே அந்த ரசிகரின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.. சூரியை பார்த்துமே, அந்த குடும்பத்தினர் திக்குமுக்காடி போய்விட்டனர்..

அம்மா உடல்நிலை: ரசிகரின் அம்மாவை நேரில் சந்தித்த சூரி, அவரது உடல் நலம் விசாரித்தார்.. சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.. பிறகு, "உடம்பை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள்" என்று அன்புடன் சொன்னார்.. மேலும், "என் அன்பு தம்பிகள். என்னை அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். என் பெயரை சொல்லி பல உதவிகள் செய்கிறார்கள். என்னால் எதுவும் இல்லை. என் ரசிகரின் அம்மாவை என் அம்மாவாக பார்க்க வந்திருக்கிறேன் இதுவே எனக்கு பெருமை" என்றார் சூரி.

ரசிகரின் வீட்டுக்குள் நுழைந்த சூரியுடன், குடும்பத்தினர் மொத்த பேரும் சேர்ந்து போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்..இதற்கு பிறகு அதே ஆட்டோவில், அங்கிருந்து கிளம்பி சென்றார் சூரி..

நெகிழ்ச்சி: "என்னுடைய ரசிகரின் அம்மா என்னோட அம்மா மாதிரி" என்று சூரி சொன்ன இந்த வார்த்தை, அவரது ஒட்டுமொத்த ரசிகர்களிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. அத்துடன், எளிமையாகவே ஆட்டோவில் ரசிகரின் வீட்டுக்கு சென்றது, அதைவிட ஆச்சரியத்தை கிளப்பி வருகிறது.. மொத்தத்தில், சூரியின் இந்த வீடியோவை ரசிகர்களே இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+