ரஜினி யோகி காலில்போய் விழலாமா? உபி முஸ்லிம்கள் நசுக்கப்படுறாங்க.. விமர்சகர் இடிஸ் பிரசாந்த் ட்வீட்
சென்னை: உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தங்களை நசுக்கி வருவதாக முஸ்லிம்கள் குற்றம்சாட்டி வரும் நேரத்தில் அவரது காலில் நடிகர் ரஜினிகாந்த் விழலாமா என சினிமா விமர்சகரும் நடிகருமான இடிஸ் பிரசாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
இமயமலை பயணத்தை தொடர்ந்து உத்தரப்பிரதேசம் சென்ற நடிகர் ரஜினிகாந்த் பாஜகவை சேர்ந்த உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றது பெரும் விவாதத்தை உருவாக்கி உள்ளது. ட்விட்டரில் இது தொடர்பாக பதிவிட்ட சினிமா செய்தியாளர் ரமேஷ் பாலா, " 2 எதிர்மறை கருத்துக்கள் இங்கு உள்ளன.

பார்வை 1: உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததால் தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். பார்வை 2: உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரக்நாத் மடத்தின் மடாதிபதி ஆவார். எனவே ஆன்மீக காரணங்களுக்காக ரஜினி அவரது காலில் விழுந்தார். உங்கள் பார்வை?" என்று குறிப்பிட்டார்.
இதனை ரீட்வீட் செய்த பிரபல சினிமா விமர்சகரும் நடிகருமான இடிஸ் பிரசாந்த், "உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வாய்ப்பு கிடைக்கும் அனைத்து வழிகளிலும் தங்களை நசுக்குவதாக முஸ்லிம்கள் குற்றம்சாட்டி வரும் நேரத்தில் இது நடக்கிறது. ரஜினி அனைவருக்காகவும் நிற்பவர். சந்திப்பதில் தவறில்லை. ஆனால், காலில் விழ வேண்டிய தேவை என்ன? ஒவ்வொரு சரியான குடிமகனும் இந்த கேள்வியை எழுப்புவான்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதேபோல் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், "யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசி பெற்ற தலைவர். ஏஎன்ஐ பகிர்ந்த வீடியோவில் தமிழ் நடிகர் ரஜினிகாந்த் உத்தரப்பிரதேச முதலமைச்சரை கைகளை கூப்பி வணங்குகிறார். அதன் பின்னர் அவர் கால்களைத் தொட கீழே குணிவதை காணலாம்.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் உள்ள இல்லத்தில் ரஜினிகாந்த் சந்தித்தபோது அவரது பாதங்களைத் தொட்டார். உங்கள் புகழுக்கும், உயரத்திற்கும் இந்த சரிவு தேவையா ரஜினி? ஒவ்வொரு பிரபலத்திற்கும் இறுதிக்கால வரலாறு முக்கியம். இதை உணரவே மாட்டீர்கள் போல.
யோகி ஆதித்யநாத்திற்கு வயது 51. ரஜினிகாந்துக்கு வயது 73. கடந்த சில வாரங்களாக கபாலிக்கு சொம்பு தூக்கிய திருப்பூர் சுப்பு, செய்யாறு, ரமேஷ் பாலா, பணஞ்செயன் மற்றும் திரையுலக அட்டகத்திகளை, மாய்ந்து மாய்ந்து பேட்டி எடுத்த செய்தி மற்றும் யூடியூப் சேனல்களே.. இவர்களை மீண்டும் பேட்டியெடுங்கள்.
'காலில் விழுந்த காலா' பற்றி கருத்து கேளுங்கள். அதற்கு அவர்கள் எப்படி ஈயம் பூசுகிறார்கள் என்பதை உலகம் பார்க்கட்டும். எனது புகைப்படத்தை தம்ப்நெயிலாக வைத்து 'ப்ளூ சட்டையை கிழித்த' என்று பல்வேறு வீடியோக்கள் போட்டு வஞ்சத்தை தீர்த்தீர்களே? அதுதானா உங்கள் சேனல்களின் தரம்? நன்கு யோசியுங்கள்.
என்னை கரித்துக்கொட்டி, கெட்ட வார்த்தை பேசும் டம்மி பீஸ்களின் பேட்டிகளால்.. நான் 1% கூட அசரப்போவதில்லை. எல்லாமே வீணான முயற்சி. இதை தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் நோக்கமும் விருந்தினரின் மலிவான நோக்கங்களையும் பகிரங்கப்படுத்தப்படும். யார் சரியானவர் என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள். கொஞ்சமாவது முதிர்ச்சி உள்ள நெறியாளர்களை வேலைக்கு எடுங்கள். அவர்களும் ஹீரோக்களின் முரட்டு ஜால்ராக்களாக இருப்பது கண்ணியமான மீடியா தொழிலுக்கே பேரவமானம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications