"சூர்யா".. சப்போர்ட் செய்த ஸ்டாலின்.. துணைக்கு வந்த சீமான்.. ஒன்றாக களமிறங்கிய திமுக - நாம் தமிழர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக - நாம் தமிழர் கட்சிகளுக்கு இடையே பல்வேறு விஷயங்களில் நிறைய கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தாலும், தற்போது ஒரு விஷயத்தில் இரண்டு கட்சிகளும் ஒன்றாக களமிறங்கி இருக்கின்றன.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு பின்பாக இணையத்தில் நாம் தமிழர் - திமுகவினர் இடையிலான மோதல் கொஞ்சம் அதிகரித்துள்ளது. ஈழ தமிழர் விவகாரம், புலம்பெயர் தமிழரின் அரசியல் நிலைப்பாடு, 7 பேர் விடுதலை என்று பல்வேறு விஷயங்களில் நாம் தமிழர் - திமுக இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இணையத்தில் இரண்டு கட்சி நிர்வாகிகளும் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் தற்போது ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக இரண்டு கட்சிகளும் ஒன்றாக குரல் கொடுத்துள்ளன.

ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா

ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா

மத்திய அரசு கொண்டு வந்து இருக்கும் ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக நடிகர்கள் பலர் கொதித்து போய் உள்ளனர். முக்கியமாக கோலிவுட் பிரபலங்கள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து உள்ளனர். இந்த சட்ட திருத்த மசோதா தங்களின் உரிமையை மொத்தமாக பாதிக்கும். முறையாக படம் எடுக்க முடியாது. அரசுக்கு ஆதரவாக மட்டுமே படம் எடுக்க முடியும் என்ற சூழ்நிலை நிலவும். கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று நடிகர்கள் கார்த்தி, சூர்யா தெரிவித்து உள்ளனர்.

முதல் ஆள்

முதல் ஆள்

இந்த மசோதாவை முதல் ஆளாக எதிர்த்தவர்களில் நடிகர் சூர்யா முக்கியமானவர். இந்த மசோதா நிறைவேறினால் சுதந்திரமாக படமெடுக்க முடியாது. எங்களின் கருத்துரிமை இதனால் நெறிக்கப்படும் என்று வெளிப்படையாக சூர்யா இந்த மசோதாவிற்கு எதிராக பேசி இருந்தார். நடிகர் கார்த்தியும் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து இந்த மசோதாவிற்கு எதிராக மனு கொடுத்தார்.

பாஜக

பாஜக

நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக சூர்யா நிலைப்பாடு எடுத்துள்ளார். இந்த மசோதாவிற்கு எதிராகவும் சூர்யா பேசிய நிலையில், தமிழ்நாடு பாஜக இவருக்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. சூர்யாவின் செயலை கண்டித்து, தமிழ்நாடு பாஜக உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். சூர்யாவிற்கு எதிராக பாஜக தீர்மானம் நிறைவேற்றிய மறுநாளே முதல்வர் ஸ்டாலின் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தார்.

மனு

மனு

சினிமாவின் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் இந்த சட்டம் உள்ளது. சான்றிதழ் வாரியம் மற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் இந்த சட்டம் உள்ளது. கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது இந்த சட்டம் என்று முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நடிகர்கள் சூர்யா, கார்த்தி, வெற்றிமாறன் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஸ்டாலின் இந்த நிலைப்பாட்டை எடுத்தார்.

சூர்யா

சூர்யா

சூர்யாவிற்கு ஆதரவாகவும், இந்த மசோதாவிற்கு எதிராகவும் திமுக நிலைப்பாடு எடுத்துள்ளது. இந்த நிலையில் தற்போது நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானும் சூர்யாவிற்கு ஆதரவாக களமிறங்கி உள்ளார். ஒளிப்பதிவு திருத்த மசோதாவில் சூர்யாவின் நிலைப்பாட்டிற்கு நாம் தமிழர் எப்போது உறுதுணையாக இருக்கும். சூர்யாவை எதிர்க்கும் பாஜகவிற்கு என்னை எதிர்க்கும் துணிவு இருக்கிறதா?

சீமான் ஆதரவு

சீமான் ஆதரவு

சூர்யாவை தொட வேண்டும் என்றால் என்னை தாண்டித்தான் செல்ல வேண்டும். நடிகர் சூர்யாவை தனி நபர் என்று நினைத்து பாஜக மிரட்டவோ, எதிர்க்கவோ நினைத்தால் விளைவு மோசமாக இருக்கும். அவரிடம் விவாதிக்க தயாராகும் பாஜக என்னுடன் விவாதிக்க தயாரா என்று பாஜகவிற்கு எதிராக சீமான் குரல் கொடுத்துள்ளார். சூர்யாவிற்கு முழு ஆதரவை சீமான் இந்த விவகாரத்தில் கொடுத்துள்ளார்.

Recommended Video

    இந்த பக்கம் DMK.. அந்த பக்கம் BJP.. Tamilnadu அரசியலில் ஒரே நாளில் ஏற்பட்ட பல மாற்றங்கள்!
    திமுக

    திமுக

    ஒளிப்பதிவு திருத்த மசோதாவில் சூர்யாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை தமிழ்நாடு திமுக அரசு எடுத்த நிலையில் தற்போது சீமானும் சூர்யாவிற்கு ஆதரவாக பேசி உள்ளார். சூர்யாவிற்கு ஆதரவாக திரையுலக பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவிக்காத நிலையில் இரண்டு முக்கியமான கட்சிகள் அவருக்கு ஆதரவாக களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+