திமுக - மநீம.. 2 கட்சியும் இணையும் ஒரு புள்ளி.. செயலுக்கு வரும் பிரசாந்த் கிஷோரின் முக்கிய திட்டம்!
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுகவும் ஒன்றாக இணைந்து வருகிறது.
Recommended Video
சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுகவும் ஒன்றாக இணைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுகிறது. இந்த சட்ட திருத்த பிரச்சனை இரண்டு கட்சிகளையும் ஒன்றாக கரம் கோர்க்க வைக்க வாய்ப்புள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க கலவரமும் போராட்டமும் வெடித்து இருக்கிறது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லியில் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த சட்டம் ஒரு வகையில் பல முக்கிய கட்சிகளை ஒன்று இணைத்துள்ளது. கொள்கை வேறுபாடுகளை மறந்து பல மாநில கட்சிகள் இதனால் ஒன்றாக இணைந்து போராட தொடங்கி உள்ளது.

என்ன கட்சிகள்
குடியுரிமை சட்ட திருத்த பிரச்சனை திமுக - மக்கள் நீதி மய்யம் கட்சிகளை ஒன்றாக கரம் கோர்க்க வைக்க வாய்ப்புள்ளது. இதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. இந்தியா முழுக்க உள்ள பாஜக கூட்டணியில் இல்லாத கட்சியை சேர்ந்த தலைவர்களை அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் அணி திரட்டி வருகிறார். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பிரசாந்த் கிஷோர் கடுமையாக காய் நகர்த்தி வருகிறார். இதை எப்படியாவது தடை செய்ய வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் தீவிரமாக முயன்று வருகிறார்.

இரண்டு முக்கியமான கட்சிகள்
இதற்கு எதிராக கட்சிகளை எல்லாம் இணைப்பது பிரசாந்த் கிஷோரின் தற்போது கனவாக உள்ளது என்கிறார்கள். இவர் ஒரு வகையில் தமிழகத்தில் இருக்கும் இரண்டு முக்கியமான கட்சிகளை இணைக்க முயன்று வருகிறார் என்றும் கூட கூறலாம். ஆம் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழகத்தில் திமுக, மக்கள் நீதி மய்யம் இரண்டையும் பிரசாந்த் கிஷோர் அணி திரட்டி வருகிறார் என்று கூறுகிறார்கள்.

என்ன அடிப்படை
பிரசாந்த் கிஷோர் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அரசியல் ஆலோசகராக இருக்கிறார். ஆனால் இவர் தேர்தல் ஆலோசனைகளை அந்த கட்சிக்கு வழங்கவில்லை. கட்சியின் அடிப்படையை கட்டமைப்பை உருவாக்கவும், கட்சியை மக்கள் இடையே கொண்டு சேர்க்கவும், பிரபலப்படுத்தவும் பிரசாந்த் கிஷோர் மக்கள் நீதி மய்யம் உடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

திமுக எப்படி
இதேபோல் இன்னொரு பக்கம் திமுகவிற்காக பிரசாந்த் கிஷோர் அரசியல் ஆலோசனை வழங்கி வருகிறார். 2021ல் தமிழகத்தில் நடக்க போகும் சட்டசபை தேர்தலுக்காக பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கி வருகிறார். குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து பிரசாந்த் கிஷோர் திமுகவுடன் ஆலோசனையும் நடத்தி உள்ளார்.

இன்று போராட்டம்
இந்த ஆலோசனையை தொடர்ந்து இன்று திமுக சென்னை உட்பட தமிழகம் முழுக்க குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்துகிறது. திமுக தலைவர் ஸ்டாலினும் போராட்டம் நடத்த உள்ளார். உதயநிதி ஸ்டாலின் , கனிமொழி ஆகியோரும் இதற்கு எதிராக போராட்டமும் நடத்த உள்ளனர்.

என்ன வழக்கு
இன்னொரு பக்கம் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் வழக்கு தொடுத்துள்ளது. அரசியல் ரீதியாக சட்டம் ஒன்றுக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் தொடுத்த முதல் வழக்கு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையும் புள்ளி
இதுதான் திமுகவும் - மக்கள் நீதி மய்யமும் இணையும் புள்ளி என்று கூறுகிறார்கள். ஆம் பிரசாந்த் கிஷோர் விருப்பப்படி இரண்டு கட்சிகள், இந்த சட்டத்தை எதிர்க்கும் புள்ளியில் இணையலாம். அது எதிர்காலத்தில் கூட்டணியாக மாற கூட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

ஸ்டாலின்
கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் கமல்ஹாசனை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். இவர்கள் சுமார் 20 நிமிடம் ஆலோசனை நடத்தினார்கள். அப்போதே திமுக மக்கள் நீதி மய்யம் கூட்டு சேர்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.

பல்வேறு மாநிலம்
பிரசாந்த் கிஷோர் பல்வேறு மாநிலங்களில் வேறு வேறு கொள்கை கொண்ட கட்சிகளை இந்த சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று ஒன்று சேர்த்து வருகிறார். உதாரணமாக மேற்கு வங்கத்தில் பிரசாந்த் கிஷோரின் நெருங்கிய நண்பர் மமதா பானர்ஜியை கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து போராட்டம் செய்ய வைக்க முயன்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications