கமல் எனக்கு போன் செய்தார்.. குடியுரிமை சட்டம் குறித்து பேசினோம்.. பின்னணியை உடைத்த ஸ்டாலின்!
குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தன்னிடம் பேசினார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தன்னிடம் பேசினார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டம் காரணமாக திமுகவும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் நெருக்கமாகி வருகிறார்கள். இரண்டு கட்சிகளும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று சென்னையில் திமுக சார்பாக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணியில் இருக்கும் 11 கட்சிகள் கலந்து கொண்டது.

என்ன சொன்னார்
இந்த கூட்டத்திற்கு பின் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் , நாட்டின் அமைதியை குலைக்கும் சட்டமாக இந்த சட்டம் உருவாகி உள்ளது. இதற்கு எதிராக திமுக கடுமையாக போராடும். சென்னையில் திமுக கூட்டணி நடத்தும் பேரணி பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும். அடுத்த கட்டத்திற்கு போராட்டத்தை எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளோம். இதற்காக விரைவில் மீண்டும் கூட்டம் போட்டு ஆலோசனை நடத்துவோம்.

கமல்ஹாசன்
திமுகவின் கூட்டம் குறித்து கமல்ஹாசன் என்னிடம் பேசினார். அவரிடம் நான் குடியுரிமை சட்டம் குறித்து விவாதித்தேன். அடுத்தடுத்த கூட்டங்களில் கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி மக்கள் நீதி மய்யம் போல ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளும் கலந்து கொள்ளும். அவர்களுடன் நாங்கள் இணைந்து செயல்படுவோம்.

அரசியல்
எங்கள் போராட்டத்தில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். மாணவர்கள், இளைஞர்கள், வேலைக்கு செல்வோர், பெண்மணிகள் என்று யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். இது ஒரு அரசியல் சார்ந்த போராட்டம் கிடையாது. இது மக்களுக்கான போராட்டம்.

என்ன அழைப்பு
திமுக கூட்டணியின் பேரணியில் எந்த அரசியல் தலைவர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். அதிமுக தமிழினத்திற்கு துரோகம் செய்துள்ளது. தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு தமிழனையும் அதிமுக ஏமாற்றி உள்ளது. தங்களுக்கு வாக்களித்த இஸ்லாமிய மக்களை அதிமுக ஏமாற்றி இருக்கிறது என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications