குடியுரிமை சட்ட திருத்தம் LIVE: திமுக போராட்டம்.. ஸ்டாலின் ஆக்ரோஷம்!

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. தமிழகத்தில் திமுக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெரும் எதிர்ப்புகளுக்கு இடையில் குடியுரிமை சட்ட திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்த குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் பல்வேறு பகுதிகளில் தீவிரம் அடைந்து வருகிறது. அசாம், டெல்லி, மேற்கு வங்கம், ஹைதராபாத், பீகார், உத்தர பிரதேசம், கேரளா என்று பல பகுதிகளில் தீவிரமாக போராட்டம் நடந்து வருகிறது.

இந்த விஷயத்தில் அமைதியாக இருந்த காங்கிரஸ் கட்சியும் தற்போது தீவிரமாக போராட்டம் செய்ய தொடங்கி விட்டது. இதற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Dec 17, 2019, 1:37 pm IST

உயர் நீதிமன்றங்களை மாணவர்கள் அணுகலாம். சம்பவம் நடந்த மாநிலத்தின் உயர் நீதிமன்றங்களை மாணவர்களை அணுகலாம். மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் வழக்கை விசாரிக்கலாம். மாநில உயர் நீதிமன்றம் இதில் விசாரணை ஆணையங்களை அமைக்கலாம் - உச்ச நீதிமன்றம்.
Dec 17, 2019, 1:14 pm IST

இனிமேலும் எங்களால் மீண்டும் மீண்டும் சொல்ல முடியாது. டெல்லி ஹைகோர்ட்டில் இதை முறையிடுங்கள்: அங்கு விசாரிப்பார்கள். டெல்லி ஹைகோர்ட் தலைமை நீதிபதி இதை விசாரிப்பார் - தலைமை நீதிபதி
Dec 17, 2019, 1:13 pm IST

நாங்கள் ஒன்றும் கீழமை நீதிமன்றம் கிடையாது. இது தொடர்பான ஏன் எங்களிடம் முறையிட்டீர்கள். டெல்லியில் எத்தனை பேருந்து கொளுத்தப்பட்டது. பேருந்தை எரித்தது யார்? - தலைமை நீதிபதி
Dec 17, 2019, 12:57 pm IST

முன்னாள் நீதிபதி தலைமையில் இதை விசாரிக்க வேண்டும் - மாணவர்கள் தரப்பு
Dec 17, 2019, 12:57 pm IST

முதலில் இந்த வழக்கை ஹைகோர்ட் விசாரிக்கட்டும். அதன்பின் உங்களுக்கு சந்தேகம் என்றால் சுப்ரீம் கோர்ட் வாருங்கள் - தலைமை நீதிபதி
Dec 17, 2019, 12:56 pm IST

இந்த வழக்கை டெல்லி ஹைகோர்ட் விசாரிப்பது தான் சரியாக இருக்கும் - தலைமை நீதிபதி
Dec 17, 2019, 12:56 pm IST

பல்கலைக்கழகம் தனியார் இடம்: அங்கு போலீஸ் அனுமதி இன்றி சென்றுள்ளது - மாணவர்கள் தரப்பு
Dec 17, 2019, 12:56 pm IST

மாணவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை வாபஸ் வாங்க வேண்டும் - மாணவர்கள் தரப்பு
Dec 17, 2019, 12:56 pm IST

போலீசை கல்லால் தாக்கினால் அவர்கள் என்ன செய்வார்கள். மாணவர்கள் இப்படி வன்முறையில் ஈடுபட கூடாது - தலைமை நீதிபதி.
Dec 17, 2019, 12:56 pm IST

நாங்கள் ஒன்றும் கீழமை நீதிமன்றம் கிடையாது. இது தொடர்பான ஏன் எங்களிடம் முறையிட்டீர்கள். டெல்லியில் எத்தனை பேருந்து கொளுத்தப்பட்டது. பேருந்தை எரித்தது யார்? - தலைமை நீதிபதி .
Dec 17, 2019, 12:55 pm IST

இதில் பல அரசுகள், பல அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இருக்கிறார்கள். எல்லோருக்கும் தனி தனியாக ஆலோசனைகள் வழங்க முடியாது. எல்லோரையும் தனி தனியாக விசாரிக்க முடியாது - தலைமை நீதிபதி.
Dec 17, 2019, 12:55 pm IST

பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகிறது - தலைமை நீதிபதி
Dec 17, 2019, 12:55 pm IST

நாடு முழுக்க போராட்டம் நடக்கிறது - மாணவர்கள் தரப்பு
Dec 17, 2019, 12:55 pm IST

எங்களின் போராடும் உரிமையை பறிக்க கூடாது - மாணவர்கள் தரப்பு
Dec 17, 2019, 12:55 pm IST

மாணவர்கள்தான் நமது எதிர்காலம்: அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக நாடே எழுந்து போராட்டம் செய்து வருகிறது. நாடு முழுக்க பெரிய புரட்சியே நிகழ்ந்து வருகிறது - மாணவர்கள் தரப்பு
Dec 17, 2019, 12:55 pm IST

படிக்கும் மாணவர்களை ஆயுதம் ஏந்திய போலீஸ் தாக்கியுள்ளது - மாணவர்கள் தரப்பு
Dec 17, 2019, 12:55 pm IST

உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு விசாரணை செய்து வருகிறது.
Dec 17, 2019, 12:54 pm IST

மாணவர்கள் மீதான டெல்லி போலீஸ் தாக்குதலுக்கு எதிரான வழக்கு மீது விசாரணை தொடங்கியது
Dec 17, 2019, 11:17 am IST

குடியுரிமை சட்டம் என்பது நாடாளுமன்றத்தில் கடந்த 11- இல் நிறைவேற்றப்பட்டது. 13-ஆம் தேதி திமுகவின் இளைஞரணி, மாணவரணி இணைந்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தின. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காலையில் கைது மாலையில் விடுதலை. போராடியவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. வழக்குகளுக்காக மூலையில் அஞ்சும் இயக்கம் திமுக இல்லை- ஸ்டாலின்.
Dec 17, 2019, 11:17 am IST

குடியுரிமை திருத்த சட்டம் உடனடியாக திரும்ப பெற வேண்டும்- ஸ்டாலின்
Dec 17, 2019, 11:00 am IST

தமிழகம் முழுக்க திமுக போராட்டம் தொடங்கியது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக மாபெரும் போராட்டம். காஞ்சிபுரத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம். சென்னையில் கனிமொழி, தயாநிதி மாறன், உதயநிதி ஆகியோர் போராட்டம்.
Dec 17, 2019, 7:21 am IST

போராட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள ஸ்டாலின் அழைப்பு
Dec 17, 2019, 7:21 am IST

தமிழகம் முழுக்க திமுகவினர் போராட்டம் நடத்த உள்ளனர்
Dec 17, 2019, 7:20 am IST

சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம்
Dec 17, 2019, 7:20 am IST

குடியுரிமை சட்ட திருத்தம்: திமுக சார்பில் இன்று போராட்டம்

Citizenship Amendment LIVE UPDATES: Protest in many parts of cities all over India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+